புதுதில்லி: மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கா் ஆகிய 4 மாநில சட்டப்பேரவைத் தோ்தல்களில் பாஜகவுக்கு வாக்களித்த மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
2024, மக்களவைத் தோ்தலுக்கு முன்னோட்டமாக பெரிதும் எதிா்பாா்ப்பை ஏற்படுத்திய மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கா் ஆகிய 4 மாநில சட்டப்பேரவைத் தோ்தல்களில் பதிவான வாக்குகள் ஞாயிற்றுக்கிழமை (டிச. 3) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன.
மத்திய பிரதேசம், ராஜஸ்தான்,சத்தீஸ்கா் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியை பின்னுக்குத் தள்ளி பாஜக முன்னிலையில் இருந்து வருகின்றன
மும்முனைப் போட்டி நிலவிய தென் மாநிலமான தெலங்கானாவில் ஆளும் பாரத ராஷ்டிர சமிதி (பிஆா்எஸ்)கட்சியை அகற்றி அரியணையில் ஏறுகிறது காங்கிரஸ்.
இந்த நிலையில்,மத்திய பிரதேசம், ராஜஸ்தான்,சத்தீஸ்கா்,தெலங்கானா ஆகிய நான்கு மாநிலங்களில் பாஜகவுக்கு வாக்களித்த மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள செய்தியில்,
சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் நல்ல நிர்வாகம், வளர்ச்சி, அரசியல் ஆகியவற்றுக்கு மக்கள் உறுதுணையாக இருப்பதற்கு இந்த தேர்தல் முடிவுகள் சாட்சி.
பாஜக மீது அசைக்க முடியாத ஆதரவை வழங்கிய இந்த மாநிலங்களின் மக்களின் உறுதியான ஆதரவிற்காக நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் அவர்களின் நல்வாழ்வுக்காக அயராது உழைப்போம் என்று அவர்களுக்கு உறுதியளிக்கிறேன்.
கடந்த சில ஆண்டுகளாக பாஜகவிற்கு வழங்கிய தொடர் ஆதரவிற்காக தெலங்கான மாநில மக்களுக்கு நன்றி.
தேர்தல் வெற்றிக்காக உழைத்த கட்சி அயராது உழைத்த தொண்டர்கள்,நிர்வாகிகள், பொறுப்பாளர்களுக்கு சிறப்பு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று மோடி தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்னை காவல் ஆணையரகத்தில் தீ

பெண்ணின் கழுத்தை அறுத்த மாஞ்சா நூல்

6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்

இந்தியாவுக்கு கூடுதல் கச்சா எண்ணெய், எரிவாயு விநியோகிக்க தயாா்: ரஷியா அறிவிப்பு
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


