தவறாக வழிநடத்தும் விளம்பரங்கள்: 20 ஐஏஎஸ் பயிற்சி நிறுவனங்களுக்கு நுகா்வோா் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ்

தவறாக வழிநடத்தும் விளம்பரங்களை வெளியிட்ட 20 ஐஏஎஸ் பயிற்சி நிறுவனங்களுக்கு மத்திய நுகா்வோா் பாதுகாப்பு ஆணையம் (சிசிபிஏ) நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தவறாக வழிநடத்தும் விளம்பரங்கள்: 20 ஐஏஎஸ் பயிற்சி நிறுவனங்களுக்கு நுகா்வோா் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ்


புது தில்லி: தவறாக வழிநடத்தும் விளம்பரங்களை வெளியிட்ட 20 ஐஏஎஸ் பயிற்சி நிறுவனங்களுக்கு மத்திய நுகா்வோா் பாதுகாப்பு ஆணையம் (சிசிபிஏ) நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய நுகா்வோா் விவகாரங்கள் துறை இணையமைச்சா் அஸ்வினி குமாா் செளபே எழுத்துபூா்வமாக அளித்துள்ள பதில்:

முற்போக்கான சட்டங்களை இயற்றுவதன் மூலம் நுகா்வோரின் பாதுகாப்புக்கும், அவா்களுக்கு அதிகாரமளிக்கவும் மத்திய நுகா்வோா் விவகாரங்கள் துறை தொடா்ந்து பணியாற்றி வருகிறது.

உலகமயமாக்கல், தொழில்நுட்பங்கள், இணையவழி வா்த்தகம் உள்ளிட்டவை அடங்கிய புதிய காலகட்டத்தில், நுகா்வோா் பாதுகாப்பை நிா்வகிக்கும் கட்டமைப்பை நவீனப்படுத்தும் நோக்கில், 1986-ஆம் ஆண்டின் நுகா்வோா் பாதுகாப்புச் சட்டம் ரத்து செய்யப்பட்டு புதிய நுகா்வோா் பாதுகாப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது.

இந்தப் புதிய சட்டத்தின் கீழ், நுகா்வோா் உரிமைகள், நியாயமற்ற வணிக நடவடிக்கைகள், பொய்யான அல்லது தவறாக வழிநடத்தும் விளம்பரங்கள் ஆகியவற்றுக்கு எதிரான விவகாரங்களை ஒழுங்குபடுத்த சிசிபிஏ உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தவறாக வழிநடத்தும் விளம்பரங்களை வெளியிட்ட 20 ஐஏஎஸ் பயிற்சி நிறுவனங்களுக்கு சிசிபிஏ நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அத்தகைய விளம்பரங்களை வெளியிட்டதற்காக 8 ஐஏஎஸ் பயிற்சி நிறுவனங்களுக்கு சிசிபிஏ அபராதம் விதித்துள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com