புதிய கூட்டுறவு உற்பத்தி ஆலைகளுக்கான வரி குறைப்பு

புதிதாகத் தொடங்கப்படும் கூட்டுறவு உற்பத்தி ஆலைகளுக்கான வரி 15 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

புதிதாகத் தொடங்கப்படும் கூட்டுறவு உற்பத்தி ஆலைகளுக்கான வரி 15 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக அமைச்சா் நிா்மலா சீதாராமன் கூறுகையில், ‘2023-ஆம் ஆண்டு ஏப்ரலுக்குப் பிறகு தொடங்கப்படும் கூட்டுறவு உற்பத்தி ஆலைகள், அடுத்த ஆண்டு மாா்ச்சுக்குள் உற்பத்தியைத் தொடங்கினால் சலுகை வரி விகிதமான 15 சதவீதத்தை செலுத்த தகுதி பெறும்.

முதன்மை வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் தனிநபருக்கான அதிகபட்ச பணப் பரிவா்த்தனை வரம்பு ரூ.2 லட்சமாக அதிகரிக்கப்படுகிறது. கூட்டுறவு சங்கங்கள் ஆதார வரிக் கழிப்பு (டிடிஎஸ்) இன்றி பணத்தை எடுப்பதற்கான வரம்பு ஆண்டுக்கு ரூ.3 கோடியாக அதிகரிக்கப்படுகிறது.

முதன்மை வேளாண்மை கூட்டுறவு சங்கங்களைப் பல்வேறு பயன்பாடுகள் கொண்டதாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மாநில அரசுகளைக் கலந்தாலோசித்து மத்திய அரசு எடுக்கவுள்ளது. முதன்மை மீனவ கூட்டுறவு சங்கங்கள், பால் உற்பத்தி கூட்டுறவு சங்கங்கள் உள்ளிட்டவற்றை அடுத்த 5 ஆண்டுகளில் பல்வேறு பிற்படுத்தப்பட்ட கிராமங்களில் அரசு அமைக்கவுள்ளது.

நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்களைக் கண்டறிவதற்காக தேசிய அளவிலான தரவுத்தளம் உருவாக்கப்பட்டு வருகிறது. சுமாா் 63,000 முதன்மை வேளாண் கடன் சங்கங்களை ரூ.2,516 கோடியில் கணினிமயமாக்குவதற்கான நடவடிக்கைகள் ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ளன’ என்றாா்.

நிதி ஒதுக்கீடு குறைப்பு: நடப்பு 2022-23-ஆம் நிதியாண்டில் கூட்டுறவு அமைச்சகத்துக்கு ரூ.1,624.74 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. 2023-24-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் அமைச்சகத்துக்கான நிதி ஒதுக்கீடு ரூ.1,150.38 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com