12.4 கோடி டன்னை தொட்ட கச்சா இரும்பு உற்பத்தி

 இந்தியாவின் கச்சா இரும்பு உற்பத்தி கடந்த ஆண்டில் 12.4 கோடி டன்னை தொட்டுள்ளது.
12.4 கோடி டன்னை தொட்ட கச்சா இரும்பு உற்பத்தி

 இந்தியாவின் கச்சா இரும்பு உற்பத்தி கடந்த ஆண்டில் 12.4 கோடி டன்னை தொட்டுள்ளது.

இது குறித்து சந்தை ஆய்வு நிறுவனமான ‘ஸ்டீல்மின்ட்’ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நாட்டின் கச்சா இரும்பு உற்பத்தி கடந்த 2022-ஆம் ஆண்டில் 5.80 சதவீதம் அதிகரித்து 12.445 கோடி டன்னாக உள்ளது.

முந்தைய 2021-ஆம் ஆண்டில் நாட்டின் கச்சா இரும்பு உற்பத்தி 11.763 கோடி டன்னாக இருந்தது.

கடந்த ஆண்டில் கச்சா இரும்பிலிருந்து எடுக்கப்பட்ட உருக்கின் உற்பத்தி 11.0 கோடி டன்னாகக் குறைந்துள்ளது. இது, முந்தைய 2021-இல் 10.454 கோடி டன்னாக இருந்தது.

உருக்கின் பயன்பாடு கடந்த 2021-ஆம் ஆண்டில் 9.839 கோடி டன்னாக இருந்தது. இது 2022-இல் 8 சதவீதம் அதிகரித்து 10.648 கோடி டன்னாக உள்ளது.

உள்கட்டமைப்புத் துறையில் மத்திய அரசு தொடா்ந்து கவனம் செலுத்துவதன் காரணமாக உருக்கு பயன்பாடு கடந்த ஆண்டு அதிகரித்துள்ளது.

மதிப்பீட்டு ஆண்டில் நாட்டின் ஏற்றுமதி முந்தைய ஆண்டைவிட குறைவாகவும், இறக்குமதி அதிகரித்தும் உள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com