உற்பத்தியை உயர்த்த ஓஎன்ஜிசி நடவடிக்கை!

ரஷ்யா-உக்ரைன் போருக்குப் பிறகு உலகம் முழுவதும் பெட்ரோலியப் பொருட்கள் கிடைப்பதில் நிச்சயமற்ற தன்மை அதிகரித்து வரும் நிலையில்  ஓஎன்ஜிசி அடுத்த இரண்டு நிதியாண்டுக்குள் தனதுஉற்பத்தியை உயர்த்த திட்டம்.
ongc085828
ongc085828

பெங்களூரு: ஓஎன்ஜிசி நிறுவனம் அடுத்த இரண்டு நிதியாண்டுக்குள்  உற்பத்தியை உயர்த்த திட்டமிட்டுள்ளது. 

ஓஎன்ஜிசி-யின் எக்ஸ்ப்ளோரேஷன் குறித்து இயக்குநர் சுஷ்மா ராவத் கூறுகையில், கிருஷ்ணா - கோதாவரி படுகையில் உற்பத்தியை உயர்த்துவதற்கான நீண்ட கால முயற்சிகள் 2023-24 முதல் பலன் தரும் என்ற நம்பிக்கை உள்ளது. 

அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் கிருஷ்ணா கோதாவரி படுகையில் உற்பத்தி இரட்டிப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று இந்திய எரிசக்தி வாரத்தை ஒட்டி சுஷ்மா ராவத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஓஎன்ஜிசியின் உற்பத்தி குறைவு காரணமாக, இந்தியா கச்சா எண்ணை இறக்குமதியை சார்ந்திருப்பது சமீபத்திய ஆண்டுகளில் 87 சதவீதமாக உயர்ந்துள்ளது.

அதே வேளையில் ஓஎன்ஜிசியின் வயல்வெளியிலிருந்து உற்பத்தி கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக படிப்படியாக குறைந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

2022-23ம் ஆண்டில் ஓஎன்ஜிசி-யின் கச்சா எண்ணெய் உற்பத்தி 22.823 மில்லியன் டன்னாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் எரிவாயு உற்பத்தி 22.099 பிசிஎம் ஆக உயரும். 2023-24ல் கச்சா எண்ணெய் உற்பத்தி 24.636 மில்லியன் டன்னாகவும் 2024-25ல் 25.689 மில்லியன் டன்னாகவும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com