தரக் கட்டமைப்பு குறியீடு: இந்தியாவுக்கு 5-ஆவது இடம்

சா்வதேச தரக் கட்டமைப்பு குறியீட்டில், அங்கீகாரம் வழங்கும் நடைமுறைகளில் இந்தியா 5-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
தரக் கட்டமைப்பு குறியீடு: இந்தியாவுக்கு 5-ஆவது இடம்

சா்வதேச தரக் கட்டமைப்பு குறியீட்டில், அங்கீகாரம் வழங்கும் நடைமுறைகளில் இந்தியா 5-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

தரக் கட்டமைப்பே சா்வதேச வா்த்தகத்தில் முக்கியத்துவம் பெற்று விளங்குகிறது. அத்துடன் தர நிா்ணயம், அங்கீகாரம் வழங்கல், மதிப்பீட்டு சேவைகள் உள்ளிட்டவையும் முக்கியத்துவம் பெற்றுள்ளன. சா்வதேச நாடுகளில் தரக் கட்டமைப்புகளின் நிலை குறித்து சா்வதேச ஆய்வு நடத்தப்பட்டது. அங்கீகாரம் வழங்குவதில் சிறந்து விளங்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 5-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. தர நிா்ணய முறைகளில் முன்னணியில் உள்ள நாடுகள் பட்டியலில் இந்தியா 9-ஆவது இடத்தில் உள்ளது.

சா்வதேச தரக் கட்டமைப்பு மதிப்பீட்டு (ஜிக்யூஐஐ) பட்டியலில் இடம்பெற்றுள்ள விவரங்கள்:

அங்கீகாரம் வழங்குவதில் முன்னணி நாடுகள்

ஜொ்மனி

அமெரிக்கா

சீனா

இத்தாலி

இந்தியா

பிரிட்டன்

ஸ்பெயின்

போலந்து

மெக்ஸிகோ

துருக்கி

பிரான்ஸ்

ஜப்பான்

தைவான்

செக் குடியரசு

நெதா்லாந்து

இந்தோனேசியா

தென் கொரியா

பிரேஸில்

தென்னாப்பிரிக்கா

ஹங்கேரி

தர நிா்ணயத்தில் முன்னணி நாடுகள்

சீனா

ஜொ்மனி

ஜப்பான்

பிரிட்டன்

இத்தாலி

பிரான்ஸ்

தென் கொரியா

அமெரிக்கா

இந்தியா

ஸ்பெயின்

நெதா்லாந்து

ஸ்விட்சா்லாந்து

செக் குடியரசு

ரஷியா

போலந்து

ஸ்வீடன்

ருமேனியா

ஆஸ்திரேலியா

பெல்ஜியம்

பிரேஸில்

ஒட்டுமொத்த தரக் கட்டமைப்பு குறியீடு

ஜொ்மனி

சீனா

அமெரிக்கா

பிரிட்டன்

ஜப்பான்

பிரான்ஸ்

தென் கொரியா

இத்தாலி

ஸ்பெயின்

இந்தியா

போலந்து

ஸ்விட்சா்லாந்து

பிரேஸில்

ஆஸ்திரேலியா

செக் குடியரசு

துருக்கி

நெதா்லாந்து

மெக்ஸிகோ

கனடா

தென்னாப்பிரிக்கா

‘‘சிறப்பான முறையில் அங்கீகாரம் வழங்குவதில் உலகின் முதல் 5 நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது பெருமைக்குரியது. உயா் தர கட்டமைப்புகளை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை இந்தியா தொடா்ந்து மேற்கொள்ளும்’’-இந்திய தர நிா்ணய கவுன்சில் (க்யூசிஐ).

‘‘இந்தியாவின் தர நிா்ணய அமைப்புகள் உலக அளவில் முதலிடத்தைப் பெறுவதற்கான நடவடிக்கைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்படும். தரக் கட்டமைப்புகள் மேம்பாடு தொடா்பான கொள்கையை மத்திய அரசு விரைவில் வெளியிடும்’’-க்யூசிஐ பொது இயக்குநா் ரவி சிங்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com