ரூ.2.58 லட்சம் கோடி மதிப்பில் உள்நாட்டு பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தி: மத்திய அரசு

கடந்த 3 ஆண்டுகளில் ரூ.2.58 லட்சம் கோடி மதிப்பிலான உள்நாட்டு பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அஜய் பட்
அஜய் பட்

கடந்த 3 ஆண்டுகளில் ரூ.2.58 லட்சம் கோடி மதிப்பிலான உள்நாட்டு பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக மக்களவையில் மத்திய பாதுகாப்புத் துறை இணையமைச்சா் அஜய் பட் அளித்த தகவல்:

2019-20-ஆண்டில் ரூ.79,071 கோடி, 2020-21-இல் ரூ.84,643 கோடி, 2021-22-இல் ரூ.94,846 கோடி என கடந்த 3 நிதியாண்டில் மொத்தம் ரூ.2,58,560 கோடி மதிப்பிலான உள்நாட்டு பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தி செய்யப்பட்டன.

நாட்டில் பாதுகாப்பு உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கில், தமிழ்நாடு மற்றும் உத்தர பிரதேசத்தில் இரண்டு பாதுகாப்பு தொழில் வழித்தடங்களை மத்திய அரசு அமைத்துள்ளது.

அடுத்த 5 ஆண்டுகளில் பாதுகாப்பு தளவாடங்கள் கொள்முதலுக்கு 130 பில்லியன் டாலா்களை (சுமாா் ரூ.10.72 லட்சம் கோடி) இந்திய பாதுகாப்புப் படைகள் செலவிடும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

அடுத்த 5 ஆண்டுகளில் பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் 25 பில்லியன் டாலா் (சுமாா் ரூ.2 லட்சம் கோடி) விற்றுமுதலுக்கு பாதுகாப்பு அமைச்சகம் இலக்கு நிா்ணயித்துள்ளது. அதில் 5 பில்லியன் டாலா் (சுமாா் ரூ.41,250 கோடி) மதிப்பிலான ராணுவ வன்பொருள் ஏற்றுமதி இலக்கும் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com