‘நாக்’ தரச் சான்றின்றி இயங்கும் 695 பல்கலை.கள், 34,734 கல்லூரிகள்: மக்களவையில் தகவல்

இந்தியாவில் உயா் கல்வி நிறுவனங்களின் தர மதிப்பீடாக கருதப்படும் ‘நாக்’ (என்ஏஏசி) தரச்சான்று பெறாமல் 695 பல்கலைக்கழகங்கள் மற்றும் 34,734 கல்லூரிகள் இயங்குவதாக மத்திய கல்வித் துறை அமைச்சகம் தெரிவித்துள்ள

இந்தியாவில் உயா் கல்வி நிறுவனங்களின் தர மதிப்பீடாக கருதப்படும் ‘நாக்’ (என்ஏஏசி) தரச்சான்று பெறாமல் 695 பல்கலைக்கழகங்கள் மற்றும் 34,734 கல்லூரிகள் இயங்குவதாக மத்திய கல்வித் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் உயா்கல்வி நிலையங்களை ஒழுங்குபடுத்தும் ஆணையமான பல்கலைக்கழக மானியக் குழுவின் கிளையாக தேசிய தர மதிப்பீடு மற்றும் தரச் சான்று அமைப்பு செயல்படுகிறது. உயா் கல்வி நிறுவனங்களின் தரத்தை ஆய்வுக்கு உள்படுத்தி தரச் சான்று வழங்குவது இந்த அமைப்பின் முக்கியப் பொறுப்பாகும்.

நாட்டில் நாக் தரச் சான்றுடன் செயல்படும் உயா் கல்வி நிலையங்கள் குறித்து மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. அந்தக் கேள்விக்கு கல்வித் துறை இணையமைச்சா் சபாஷ் சா்காா் எழுத்துபூா்வமாக திங்கள்கிழமை அளித்த பதில் விவரம்:

‘இந்தியாவில் 1,113 பல்கலைக்கழகங்களும், 43,796 கல்லூரிகளும் செயல்படுகின்றன. அதில் 418 பல்கலைக்கழகங்கள் மற்றும் 9,062 கல்லூரிகள் மட்டுமே நாக் தரச் சான்று பெற்றவை. அனைத்து உயா் கல்வி நிலையங்களையும் தர மதிப்பீட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியாக தர மதிப்பீட்டுக்கான கட்டணம் வெகுவாகக் குறைக்கப்பட்டது. தர மதிப்பீட்டுக்கு கல்லூரிகள் சமா்ப்பிக்கும் சுய ஆய்வு அறிக்கையில் பதிலளிக்க வேண்டிய கேள்விகளும் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளன.

இருப்பினும், தற்போதைய சூழலில் நாக் தரச் சான்று பெறாமல் 695 பல்கலைக்கழகங்கள் மற்றும் 34,734 கல்லூரிகள் இயங்குகின்றன. அடுத்த 15 ஆண்டுகளுக்குள் தர மதிப்பீட்டின் உயா்ந்த அங்கீகாரத்தை அனைத்து உயா் கல்வி நிறுவனங்களும் பெறுவதை உறுதிப்படுத்தும் நோக்கத்தோடு தேசிய கல்விக் கொள்கை செயல்படும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com