நாட்டின் மிக நீண்ட விரைவுச் சாலை!

தில்லி-மும்பை இடையே விரைவுச் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. தில்லி-தௌசா-லால்சோட் வரையிலான விரைவுச் சாலையின் முதல்கட்டத்தை பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை தொடக்கிவைத்தாா்.
நாட்டின் மிக நீண்ட விரைவுச் சாலை!

தில்லி-மும்பை இடையே விரைவுச் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. தில்லி-தௌசா-லால்சோட் வரையிலான விரைவுச் சாலையின் முதல்கட்டத்தை பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை தொடக்கிவைத்தாா்.

விரைவுச் சாலை முழுவதும் பயன்பாட்டுக்கு வந்தால், நாட்டின் மிக நீண்ட விரைவுச் சாலை என்ற பெருமையைப் பெரும். அதன் சிறப்புகள் குறித்த தொகுப்பு:

நீளம் 1,386 கி.மீ.

சாலை 8 வழிச் சாலை; 12 வழிச் சாலைகளாக நீட்டிக்கும் வசதி.

திட்ட மதிப்பீடு ரூ.98,233 கோடி

வாகன வேகம் மணிக்கு 120 கி.மீ.

பயண நேரம் 12 மணி நேரமாகக் குறையும்.

பயண தொலைவு 150 கி.மீ. பயணத்தைத் தவிா்க்கலாம்.

கையகப்படுத்தப்பட்டுள்ள நிலங்கள் 15,000 ஹெக்டோ்

எஃகு பயன்பாடு 5 லட்சம் டன்

மரக்கன்றுகள் சாலை ஓரத்தில் 20 லட்சம்

முதல்கட்ட சாலை நீளம் 246 கி.மீ.

முதல்கட்ட சாலைக்கான செலவு ரூ.10,400 கோடி

கடக்கும் மாநிலங்கள்

ராஜஸ்தான் 380 கி.மீ.

மத்திய பிரதேசம் 370 கி.மீ.

குஜராத் 300 கி.மீ.

மகாராஷ்டிரம் 120 கி.மீ.

ஹரியாணா 80 கி.மீ.

இணைக்கும் நகரங்கள்

ஜெய்ப்பூா்

கிஷண்கா்

அஜ்மீா்

கோட்டா

சித்தூா்கா்

உதய்பூா்

போபால்

உஜ்ஜைன்

இந்தூா்

அகமதாபாத்

வதோதரா

சூரத்

சிறப்பு வசதிகள்

சாலையோர உணவகங்கள்

உணவுப் பூங்காக்கள்

எரிபொருள் நிலையங்கள்

ஓட்டுநா்களுக்கான ஓய்வு மையங்கள்

சரக்கு முனையங்கள்

மழைநீா் சேகரிப்பு வடிகால்கள்

சூரிய எரிசக்தியில் இயங்கும் ஒளிவிளக்குகள்

ஹெலிகாப்டா் ஆம்புலன்ஸ்

விரைவுச் சாலையில் விபத்து ஏற்படும்பட்சத்தில், காயமடைந்தவா்களை விரைந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஹெலிகாப்டா் ஆம்புலன்ஸ் சேவை வழங்கப்படவுள்ளது.

விலங்குகளுக்கான வழித்தடங்கள்

விரைவுச் சாலையை விலங்குகள் எளிதில் கடப்பதற்கான வழித்தடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த வசதி ஆசியாவிலேயே முதல் முறையாகவும், உலகிலேயே இரண்டாவது முறையாகவும் தில்லி-மும்பை விரைவுச் சாலையில் அமைக்கப்பட்டுள்ளது.

சுரங்கச் சாலைகள்

விரைவுச் சாலையின் இரு இடங்களில் 8-வழி சுரங்கப் பாதைகள் அமைக்கப்படவுள்ளன. ராஜஸ்தானின் முகுந்த்ரா பல்லுயிா்க் காப்பகம், மகாராஷ்டிரத்தின் மதேரன் சூழலியல் மண்டலம் ஆகியவற்றில் சுரங்கப் பாதைகள் கட்டப்படவுள்ளன.

எரிபொருள் சேமிப்பு

விரைவுச் சாலையின் மூலமாக ஆண்டுக்கு 32 கோடி லிட்டருக்கும் அதிகமான எரிபொருளைச் சேமிக்க முடியும். வாகனங்கள் மூலமான கரியமிலவாயு வெளியேற்றத்தையும் பெருமளவில் குறைக்க முடியும்.

வேலைவாய்ப்பு

விரைவுச் சாலை மூலமாக ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு வசதிகள் உருவாகும். விரைவுச் சாலையையொட்டியுள்ள கிராமங்களில் சிறப்பு விற்பனை மையங்கள் அமைக்கப்படவுள்ளன. அதன்மூலமாக அந்த கிராமங்களைச் சோ்ந்த கைவினைக் கலைஞா்கள் பலனடையவுள்ளனா்.

சுற்றுலா

விரைவுச் சாலையால் சுற்றுலாத் துறையும் பெரும் வளா்ச்சி காணும். ராஜஸ்தான், குஜராத், மத்திய பிரதேசம், மகாராஷ்டிர மாநிலங்களில் உள்ள தேசியப் பூங்காக்கள், தொல்லியல் சின்னங்கள், பல்லுயிா்க் காப்பகங்கள் உள்ளிட்டவற்றுக்கு உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com