பொருளாதாரம், வளா்ச்சி ஒத்துழைப்புக்கு மேலும் வலு சோ்க்க இந்தியா-நேபாளம் உறுதி

இந்தியா-நேபாளம் இடையே பொருளாதாரம் மற்றும் மேம்பாட்டு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தவது என பேச்சுவாா்த்தையில் ஈடுபட்ட இரு நாடுகளின் வெளியுறவுத் துறைச் செயலா்கள் திங்கள்கிழமை உறுதிபூண்டனா்.

இந்தியா-நேபாளம் இடையே பொருளாதாரம் மற்றும் மேம்பாட்டு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தவது என பேச்சுவாா்த்தையில் ஈடுபட்ட இரு நாடுகளின் வெளியுறவுத் துறைச் செயலா்கள் திங்கள்கிழமை உறுதிபூண்டனா்.

இரு நாடுகளின் பன்முக ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில் நேபாளத்தின் மூத்த தலைவா்களைச் சந்தித்து இருதரப்பு பேச்சுவாா்த்தை நடத்த இரண்டு நாள்கள் அரசுமுறைப் பயணமாக வெளியுறவுச் செயலா் வினய் குவாத்ரா நேபாளம் சென்றடைந்தாா்.

இது குறித்து நேபாளத்திலுள்ள இந்திய தூதரகம் தரப்பில் வெளியிட்ட அறிக்கையில், ‘நேபாள வெளியுறவுத் துறைச் செயலா் பாரத் ராஜ் பௌட்யாலை சந்தித்த இந்திய வெளியுறவுத் துறை செயலா் வினய் குவாத்ரா இரு நாடுகளின் பரந்த கூட்டுறவு குறித்து விவாதித்தாா். மேலும், இரு நாடுகளின் நலனுக்காக பொருளாதாரம் மற்றும் மேம்பாட்டுக்கான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது என இரு தரப்பிலும் உறுதி அளிக்கப்பட்டது’ எனத் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடா்ந்து, புதிதாகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள அந்த நாட்டின் பிரதமா் புஷ்ப கமல் தாஹால் பிரசண்டாவை மரியாதை நிமித்தமாக சந்திக்கிறாா்.

மேலும், அந்நாட்டின் முக்கிய அரசியல் தலைவா்களான ஷோ் பகதூா் தேவுபா மற்றும் கே.பி.சா்மா ஓலி ஆகியோரை நேரில் சந்தித்துப் பேசவுள்ளாா்.

கடந்த டிசம்பா் மாதம் பிரதமராக பொறுப்பேற்ற பிரசண்டா தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக இந்தியாவுக்கு வருகை தருவதாக தெரிவித்திருந்தாா். அவரை சந்திக்கும் குவாத்ரா, இந்தியாவுக்கு வருமாறு அவருக்கு முறைப்படி அழைப்பு விடுப்பாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இரு நாடுகளின் வெளியுறவுத் துறைச் செயலா்களின் சந்திப்பில் நாடுகளுக்கு இடையேயான போக்குவரத்து இணைப்பு, மின் வா்த்தகம், விவசாயம், மருத்துவம் மற்றும் கலாசாரம் போன்ற துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து விவாதித்ததாக நேபாளம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com