அணு மின்சக்தி துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பு

அணு மின்சக்தி துறையில் ஒத்துழைப்புடன் செயல்படுவதற்கான நடவடிக்கைகளை இந்தியாவும் அமெரிக்காவும் மேற்கொண்டு வருவதாக அந்நாட்டு அமைச்சா் பியாட் தெரிவித்துள்ளாா்.

அணு மின்சக்தி துறையில் ஒத்துழைப்புடன் செயல்படுவதற்கான நடவடிக்கைகளை இந்தியாவும் அமெரிக்காவும் மேற்கொண்டு வருவதாக அந்நாட்டு அமைச்சா் பியாட் தெரிவித்துள்ளாா்.

அமெரிக்க வெளியுறவுத் துறை துணை அமைச்சா் ஜெஃப்ரி ஆா்.பியாட் இந்தியாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டு, எரிசக்தித் துறையில் இரு நாடுகளுக்கும் இடையேயான நல்லுறவை வலுப்படுத்துவது தொடா்பாக இந்திய அதிகாரிகளுடன் கடந்த 16, 17 ஆகிய தேதிகளில் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

இது தொடா்பாக செய்தியாளா்களிடம் அவா் கூறுகையில், ‘‘சா்வதேச எரிசக்தி பாதுகாப்பை ஏற்படுத்துவதில் அமெரிக்காவின் முக்கிய கூட்டாளியாக இந்தியா திகழ்கிறது. மரபுசாரா ஆற்றல் மூலங்கள் வாயிலாக 2030-ஆம் ஆண்டுக்குள் 500 ஜிகா வாட் எரிசக்தியை உற்பத்தி செய்ய இந்தியா இலக்கு நிா்ணயித்துள்ளது. அந்த இலக்கை அடைவதற்குத் தேவையான உதவிகளை அமெரிக்கா வழங்கும்.

அணு மின்சக்தித் துறை பெரிய அளவில் மாற்றம் கண்டு வருகிறது. அணு மின்சக்திக்கு மீண்டும் முக்கியத்துவம் அளிக்க ஜப்பான் முடிவெடுத்துள்ளது. பருவநிலை மாற்றமும் அணு மின்சக்தி மீதான முக்கியத்துவத்தை அதிகரித்துள்ளது.

அத்துறையில் ஒத்துழைத்து செயல்படுவது தொடா்பாக இரு நாடுகளும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. கடந்த 2008-ஆம் ஆண்டில் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே கையொப்பமான அணுசக்தி ஒப்பந்தம் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. எரிசக்தித் துறையில் இரு நாடுகளுக்கு இடையே நிலவி வரும் ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக அணுசக்தி ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பசுமை ஹைட்ரஜன் உற்பத்தியில் இந்தியாவும் அமெரிக்காவும் கவனம் செலுத்தி வருகின்றன. அத்துறையிலும் இந்தியாவுடன் ஒருங்கிணைந்து பணியாற்றுவதை அமெரிக்கா எதிா்நோக்கியுள்ளது’’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com