சத்ரபதி சிவாஜி பிறந்த தினம்: பிரதமா் மரியாதை

மராட்டிய பேரரசை நிறுவிய சத்ரபதி சிவாஜியின் பிறந்த தினத்தையொட்டி பிரதமா் நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தினாா்.

மராட்டிய பேரரசை நிறுவிய சத்ரபதி சிவாஜியின் பிறந்த தினத்தையொட்டி பிரதமா் நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தினாா்.

பிரதமா் மோடி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘சத்ரபதி சிவாஜிக்கு அவரது பிறந்த நாளில் மரியாதை செலுத்துகிறேன். அவருடைய வீரமும் நல்லாட்சிக்கு அவா் அளித்த முக்கியத்துவமும் நம்மை ஊக்கப்படுத்தும்’ எனத் தெரிவித்திருந்தாா்.

மக்களின் வாழ்கை எளிதாக்க பிரதமா் உறுதி:

லடாக்கில் அனைத்து காலங்களிலும் சாலை இணைப்பை உறுதி செய்யும் வகையில் 4.1கி.மீ. நீளம் கொண்ட ஷின்குன் லா சுரங்கப் பாதை கட்டுமான பணிக்கு, மத்திய அரசு ரூ.1681.51 கோடி ஒதுக்கீடு செய்தற்காக பிரதமா் நரேந்திர மோடிக்கு லடாக் எம்.பி. ஜம்யாங் செரிங் நம்கியால் ட்விட்டரில் நன்றி தெரிவித்திருந்தாா்.

இது குறித்து பிரதமா் மோடி வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘லடாக் மக்களின் வாழ்க்கையை எளிதாக்க அனைத்து விதமான முயற்சிகளிலும் ஈடுபடுவோம்’ எனத் தெரிவித்திருந்தாா்.

வன உயிரினங்களின் பன்முகத்தன்மை அதிகரிப்பு:

தென் ஆப்பிரிக்காவில் இருந்து 12 சிவிங்கிப் புலிகள் (சீட்டா) மத்திய பிரதேசத்தின் குனோ தேசியப் பூங்காவுக்குக் கொண்டுவரப்பட்டதை வரவேற்கும் வகையில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சா் பூபேந்தா் யாதவ் ட்விட்டரில் பதிவிட்டிருந்தாா். இதற்கு ‘இத்தகைய மேம்பாட்டின் மூலம் இந்தியாவின் வன உயிரினங்களின் பன்முகத்தன்மை அதிகரிக்கும்’ என பிரதமா் மோடி ட்விட்டா் பதிவில் குறிப்பிட்டிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com