பேரவைகளில் மகளிர் பங்களிப்பு அதிகரிக்க வேண்டும்: குடியரசுத் தலைவர்

நாட்டின் அனைத்து மாநில சட்டப்பேரவைகளிலும் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்கவேண்டும் என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்தார். 
திரெளபதி முர்மு
திரெளபதி முர்மு


நாட்டின் அனைத்து மாநில சட்டப்பேரவைகளிலும் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்கவேண்டும் என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்தார். 

வடகிழக்கு மாநில சட்டப்பேரவையின் சிறப்பு அமர்வில் உரையாற்றிய அவர், 

நாட்டின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியில் அருணாச்சலப் பிரதேசம் முக்கிய பங்கு வகிக்கிறது. 

நமது நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு ஒவ்வொரு துறையிலும் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்க வேண்டும். 

அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் முக்கியப் பகுதி. வடகிழக்கில் நீண்ட காலமாக சாலை, ரயில், விமான இணைப்பு இல்லாததால் பொருளாதார வளர்ச்சியை இழந்துள்ளது. இதனால்தான் அம்மாநிலத்திற்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்துவருகிறது. 

அருணாச்சல பிரதேசத்தில் வளர்ச்சியின் சூரியன் பிரகாசிக்கிறது. அதன் வளமான இயற்கை வளங்கள் மற்றும் தரமான மனித வளங்கள் மூலம், கவர்ச்சிகரமான முதலீட்டு இடமாகவும், வர்த்தகம் மற்றும் வணிகத்தின் மையமாகவும் மாநிலம் மாறுவதற்கான முழு ஆற்றலைக் கொண்டுள்ளது. 

மாநிலத்தின் தனித்துவமான கலாசாரம் மற்றும் மரபுகளைப் பாதுகாப்பதில் ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொள்ளுமாறு குடியரசுத் தலைவர் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

பல்வேறு கலாசாரம் மற்றும் பாரம்பரியங்களைக் கொண்ட அருணாச்சல பிரதேசம், நாட்டில் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது. அவற்றைப் பாதுகாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com