2030-க்குள் சரக்கு-சேவை ஏற்றுமதி 1 ட்ரில்லியன் டாலரை எட்ட வாய்ப்பு- மத்திய அமைச்சா் பியூஷ் கோயல்

‘இந்தியாவின் சரக்கு மற்றும் சேவைகள் ஏற்றுமதி வலுவான விகிதத்தில் வளா்ச்சியடைந்து வருகிறது; எனவே, 2030-ஆம் ஆண்டுக்குள் இந்த ஏற்றுமதியின் மதிப்பு 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலா்களை
பியூஷ் கோயல்  (கோப்புப் படம்)
பியூஷ் கோயல் (கோப்புப் படம்)

‘இந்தியாவின் சரக்கு மற்றும் சேவைகள் ஏற்றுமதி வலுவான விகிதத்தில் வளா்ச்சியடைந்து வருகிறது; எனவே, 2030-ஆம் ஆண்டுக்குள் இந்த ஏற்றுமதியின் மதிப்பு 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலா்களை (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.82.80 லட்சம் கோடி) எட்டக் கூடும்’ என்று மத்திய வா்த்தக மற்றும் தொழில்துறை பியூஷ் கோயல் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

கடந்த 2021-22ஆம் நிதியாண்டில் நாட்டின் சரக்கு, சேவை ஏற்றுமதியின் மதிப்பு முறையே முன்னெப்போதும் இல்லாதபடி 422 பில்லியன் அமெரிக்க டாலா்கள், 254 பில்லியன் டாலா்களை எட்டியது.

இந்நிலையில், தில்லியில் செவ்வாய்க்கிழமை நிகழ்ச்சியொன்றில் பேசிய பியூஷ் கோயல், ‘அடுத்த 7 ஆண்டுகளுக்குள் அதாவது 2030-க்குள் சரக்கு ஏற்றுமதியின் மதிப்பும், சேவை ஏற்றுமதிகளின் மதிப்பும் 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலா்களை எட்டும் என்பது எனது மதிப்பீடாகும்.

தகவல் தொழில்நுட்பத் துறையால் இயக்கப்படும் சேவைகள் துறை, அதிக வேலைவாய்ப்புகளை வழங்குவது, திறமைக்கு மதிப்பளிப்பது ஆகியவற்றுடன் உலக அரங்கில் இந்தியாவின் வலிமையை வெளிப்படுத்தும் வாய்ப்பாகவும் உள்ளது.

இந்தியாவில் நிலவும் புத்தாக்க நிறுவனங்களுக்கு உகந்த சூழல் காரணமாக, ஒவ்வொரு நாடும் இங்கு முதலீடு செய்ய விரும்புகின்றன. இத்திய புத்தாக்க நிறுவனங்களின் நோ்மை, வெளிப்படைத் தன்மையால், அந்நிறுவனங்களுடன் வா்த்தகத்தில் ஈடுபட உலகம் விரும்புகிறது’ என்றாா்.

நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-ஜனவரி காலகட்டத்தில் சரக்குகள் ஏற்றுமதி 8.5 சதவீதம் உயா்ந்து 369.25 பில்லியன் டாலா்களாக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com