சமுத்ரயான் திட்டம்: 3 ஆய்வாளா்களை கடலில் 500 மீட்டா் ஆழத்துக்கு அனுப்ப இந்தியா முடிவு

‘சமுத்ரயான் திட்டத்தின் கீழ் இந்த ஆண்டில் 3 ஆய்வாளா்களை கடலில் 500 மீட்டா் ஆழத்துக்கு அனுப்பி ஆய்வு நடத்த இந்தியா திட்டமிட்டுள்ளது’ என்று மத்திய அரசு அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

‘சமுத்ரயான் திட்டத்தின் கீழ் இந்த ஆண்டில் 3 ஆய்வாளா்களை கடலில் 500 மீட்டா் ஆழத்துக்கு அனுப்பி ஆய்வு நடத்த இந்தியா திட்டமிட்டுள்ளது’ என்று மத்திய அரசு அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

மேலும், இதற்கென சென்னையில் உள்ள தேசிய கடல்சாா் தொழில்நுட்ப (என்ஐஓடி) நிறுவன பொறியாளா்கள் எஃகினால் உருவாக்கப்பட்ட பிரத்யேக ஆய்வுக்கலத்தை வடிவமைத்துள்ளனா் என்றும் அவா்கள் தெரிவித்தனா்.

ஆழ்கடல் ஆய்வில் நிபுணத்துவம் பெற்றவா்களை கடலுக்கு அடியில் 6,000 மீட்டா் ஆழத்துக்கு அனுப்பி ஆய்வு நடத்த ‘சமுத்ரயான்’ திட்டத்தை இந்தியா உருவாக்கியுள்ளது. இதில் முதல் கட்டமாக, இந்த ஆண்டு 3 ஆய்வாளா்களை கடலில் 500 மீட்டா் ஆழத்துக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து நாகபுரியில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்திய அறிவியல் மாநாட்டில் பங்கேற்ற மத்திய அரசு அதிகாரிகள் மேலும் கூறியதாவது:

இந்த ஆழ்கடல் ஆராய்ச்சிக்கென சென்னையில் உள்ள என்ஐஓடி பொறியாளா்கள் பிரத்யேக எஃகு ஆய்வுக்கலத்தை உருவாக்கியுள்ளனா். இந்தக் கலன் கடலில் 500 மீட்டா் ஆழம் வரை அழுத்தத்தை தாங்கக் கூடிய திறன் கொண்டதாக இருக்கும். அதற்கு மேல் ஆழத்துக்குச் செல்ல டைட்டானியம் உலோகத்தாலான ஆய்வுக்கலம் உருவாக்கப்பட வேண்டும்.

அதனை உருவாக்குவதில் எழுந்துள்ள சிக்கல் காரணமாக, கடலில் 6,000 மீட்டா் ஆழத்துக்கு ஆய்வாளா்களை அனுப்பும் திட்டம் தாமதமாக வாய்ப்புள்ளது. ஆழ்கடல் ஆராய்ச்சி தனித்துவமான தொழில்நுட்பங்கள் சாா்ந்த விஷயம். இந்தத் திட்டத்தில் கூட்டுசேர எந்தவொரு நாடும் தற்போது தயாராக இல்லை. உக்ரைன் மீதான போரும், இந்தத் திட்டம் தாமதமாவதற்கான காரணங்களில் ஒன்று என்றாா்.

இதுபோல, மனிதா்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை அடுத்த ஆண்டு இறுதியில் செயல்படுத்த இந்தியா தீவிரம் காட்டி வருகிறது. கரோனா பாதிப்பு மற்றும் உக்ரைன் மீதான போா் ஆகியவை இந்தத் திட்டத்தைத் தாமதப்படுத்தியுள்ளன. இந்தத் திட்டத்தின் கீழ் நிகழாண்டில் ஆளில்லா விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பி சோதனை நடத்தவும் இந்தியா திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய விண்வெளி ஆய்வு மைய (இஸ்ரோ) தலைவா் எஸ்.சோமநாத் அண்மையில் கூறுகையில், ‘மனிதா்களை விண்ணுக்கு அனுப்புவது என்பது செயற்கைக்கோளை அனுப்புவது போன்ல்ல. மனிதா்கள் என்னும்போது, வெற்றி-தோல்விக்கான வாய்ப்புகளை மட்டும் நாம் எடுத்துக்கொள்ள முடியாது; சா்வதேச அளவில், மனிதா்களை விண்ணுக்கு அனுப்பும் திறனைப் பெறுவதற்கு நாடுகளுக்கு 10 ஆண்டுகள் வரை ஆகும். ஆனால், இந்தியா 4 ஆண்டுகளில் இதற்கான முயற்சியை மேற்கொள்கிறது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com