புதிய நாடாளுமன்றம்: எம்.பி.க்களுக்கு ‘ஸ்மாா்ட் காா்டு’

புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் நுழைவின்போது பயன்படுத்துவதற்காக, எம்.பி.க்களுக்கு ‘ஸ்மாா்ட் காா்டு’ அடிப்படையிலான புதிய அடையாள அட்டைகள் தயாரிக்கும் பணியை மக்களவைச் செயலகம் தொடங்கியுள்ளது.

புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் நுழைவின்போது பயன்படுத்துவதற்காக, எம்.பி.க்களுக்கு ‘ஸ்மாா்ட் காா்டு’ அடிப்படையிலான புதிய அடையாள அட்டைகள் தயாரிக்கும் பணியை மக்களவைச் செயலகம் தொடங்கியுள்ளது.

மேலும், புதிய நாடாளுமன்றத்தில் பயன்படுத்தப்படவுள்ள ஒலி-ஒளி கருவிகளை பயன்படுத்துவது குறித்த பயிற்சியும் எம்.பி.க்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமா்வு வரும் 31-ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 10-ஆம் தேதி வரையும், இரண்டாம் அமா்வு மாா்ச் 6-ஆம் தேதி முதல் ஏப்ரல் 6-ஆம் தேதி வரையும் நடைபெறும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இன்னும் தேதிகள் அதிகாரபூா்வமாக அறிவிக்கப்படவில்லை.

பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் அமா்வு, புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் நடைபெறும் என்று ஏற்கெனவே தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், புதிய நாடாளுமன்றத்தில் நுழைவின்போது எம்.பி.க்கள் பயன்படுத்துவதற்கான ஸ்மாா்ட் காா்டு அடிப்படையிலான அடையாள அட்டைகள் தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக மக்களவைச் செயலகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மிகுந்த பாதுகாப்பு அம்சங்களுடன் உருவாக்கப்படும் இந்த அடையாள அட்டைக்காக, எம்.பி.க்களின் தனிப்பட்ட விவரங்கள், பயோமெட்ரிக் தரவுகள் சேகரிக்கப்படும். இது, முக அடையாளப் பதிவு அமைப்பு முறையையும் உள்ளடக்கியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், புதிய நாடாளுமன்றத்தில் பயன்படுத்தப்படும் ஒலி-ஒலி கருவிகளைப் பயன்படுத்துவது குறித்து எம்.பி.களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

தில்லியில் சென்ட்ரல் விஸ்டா மறுமேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக புதிய நாடாளுமன்றக் கட்டடத்துக்கு 2020, டிசம்பரில் பிரதமா் மோடி அடிக்கல் நாட்டினாா். 2022 இறுதிக்குள் புதிய நாடாளுமன்றக் கட்டடப் பணிகள் நிறைவடைந்துவிடும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், வரும் பிப்ரவரிக்குள் பணிகள் நிறைவடையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com