
வடமாநிலங்களின் பல பகுதிகளில் குளிர் வாட்டி வதைத்து வருகிறது. ஒரு சில மாவட்டங்களில் பூஜ்ஜிய டிகிரி வெப்பநிலையும் பதிவாகியுள்ளது.
இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வடமாநிலங்களின் பல பகுதிகளில் வெப்பநிலை வழக்கத்தை விட குறைவாக பதிவாகியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பிகானேர் பகுதியில் குறைந்தபட்ச வெப்பநிலை பூஜ்ய டிகிரி செல்சியஸை எட்டியுள்ளது.
ராஜஸ்தானின் சுரு பகுதியில் ஒரு டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் 0.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் தில்லியின் அயநகர் பகுதியில் 1.8 டிகிரி செல்சியஸும், பஞ்சாபின் அமிர்தசரஸில் 5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தின் 33 மாவட்டங்களில் 20 டிகிரி செல்சியஸுக்கும் குறைவாக வெப்பநிலை பதிவாகியுள்ளது. வழக்கத்தை விட குளிர் அதிகமாக உள்ளதால், மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.