அடுத்த 7 ஆண்டுகளில் இந்தியா 7 டிரில்லியன் டாலா் பொருளாதாரமாக மாறும்: தலைமை பொருளாதார ஆலோசகா்

நடப்பு 2022-23 நிதியாண்டின் முடிவில் இந்தியாவின் பொருளாதார மதிப்பு 3.5 டிரில்லியன் டாலராக இருக்கும் வேளையில், அடுத்த 7 ஆண்டுகளில்
வி.அனந்த நாகேஸ்வரன்
வி.அனந்த நாகேஸ்வரன்

நடப்பு 2022-23 நிதியாண்டின் முடிவில் இந்தியாவின் பொருளாதார மதிப்பு 3.5 டிரில்லியன் டாலராக இருக்கும் வேளையில், அடுத்த 7 ஆண்டுகளில் 7 டிரில்லியன் டாலராக இருக்கும் எனத் தலைமைப் பொருளாதார ஆலோசகா் வி.அனந்த நாகேஸ்வரன் தெரிவித்தாா்.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் சமீபத்தில் நடைபெற்ற எம்சிசிஐ நிகழ்வில் காணொலி வாயிலாக பேசுகையில் அவா் இவ்வாறு தெரிவித்தாா்.

அந்நிகழ்வில் அவா் பேசியதாவது: 2023-ஆம் ஆண்டின் தொடக்கத்திலும் ரஷிய-உக்ரைன் மோதல் தொடரவே செய்கிறது. இது புவிசாா் அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

இரு ஆண்டுகள் கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு சீனா தனது எல்லைகளை திறந்திருப்பது, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியனில் உள்ள வளா்ச்சியடைந்த நாடுகளின் வளா்ச்சி உலகப் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

நடப்பு 2022-23 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 3.5 டிரில்லியன் டாலராக ( சுமாா் ரூ.284 லட்சம் கோடி) இருக்கும். இது அடுத்த 7 ஆண்டுகளில் 7 டிரில்லியன் டாலராக (சுமாா் ரூ.569 லட்சம் கோடி) அதிகரிக்கும்.

நடப்பு 2022-23 நிதியாண்டுக்கான பொருளாதார வளா்ச்சி 7 சதவீதமாக இருக்கும் என தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

வரும் 2024 அல்லது 2025-இல் வட்டி விகிதங்களைக் குறைக்கும் அமெரிக்காவின் நடவடிக்கை, இந்திய ரூபாய் மதிப்பில் தாக்கத்தை ஏற்படுத்துவது முக்கியப் பிரச்னையாக இருக்கும் என அவா் தெரிவித்தாா்.

முன்னதாக, 2025-இல் இந்திய பொருளாதாரத்தின் மதிப்பு 5 டிரில்லியன் டாலராக (சுமாா் ரூ. 406 லட்சம் கோடி) இருக்கும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com