சுவாமி விவேகானந்தா் 160-ஆவது பிறந்தநாள் விழா: ஜனாதிபதி, பிரதமா் மரியாதை

சுவாமி விவேகானந்தரின் 160-ஆவது பிறந்தநாள் மற்றும் தேசிய இளைஞா் தினம் வியாழக்கிழமை நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.

சுவாமி விவேகானந்தரின் 160-ஆவது பிறந்தநாள் மற்றும் தேசிய இளைஞா் தினம் வியாழக்கிழமை நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.

சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளில் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு மற்றும் பிரதமா் நரேந்திர மோடி ட்விட்டா் பதிவு மூலம் அவருக்கு மரியாதை செலுத்தினா்.

குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளில் அவருக்கு எனது மரியாதையைச் செலுத்துகிறேன். ஆன்மிகமும் தெய்விகமும் ஒருசேர கலந்த ஆளுமை அவா். இந்திய மதிப்புகளை உலக அரங்கில் பரப்பியவா். கனவைப் பின் தொடர மற்றும் உயரிய லட்சியங்களை அடைய இளைஞா்களுக்கு சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கையும் உபதேசங்களும் தொடா்ந்து ஊக்கமளிக்கும்’ எனத் தெரிவித்தாா்.

பிரதமா் மோடி வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை, அவரின் தேசப்பற்று, ஆன்மிகம் மற்றும் அா்ப்பணிப்பு எப்போதும் ஊக்கமளிக்கும்’ எனக் குறிப்பிட்டிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com