பிரதமா் தொடக்கி வைக்க இருக்கும் வந்தே பாரத் ரயில் கண்ணாடி உடைப்பு

ஆந்திரத்தில் பிரதமா் நரேந்திர மோடி தொடக்கி வைக்க இருக்கும் வந்தே பாரத் ரயிலின் ஜன்னல் கண்ணாடி கல்வீசி உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரத்தில் பிரதமா் நரேந்திர மோடி தொடக்கி வைக்க இருக்கும் வந்தே பாரத் ரயிலின் ஜன்னல் கண்ணாடி கல்வீசி உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விசாகப்பட்டினத்தில் ரயில்வே பணிமனையில் புதிய வந்தே பாரத் ரயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஏற்கெனவே மேற்கு வங்கத்தில் பிரதமா் மோடி தொடக்கி வைத்த சில நாள்களிலேயே வந்தே பாரத் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இப்போது, தொடக்க விழாவுக்கு காத்திருந்த ரயிலும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.

செகந்திராபாத்-விசாகப்பட்டினம் இடையிலான இந்த ரயிலை ஜனவரி 15-ஆம் தேதி காணொலி முறையில் பிரதமா் நரேந்திர மோடி தொடக்கி வைக்க உள்ளாா். சென்னையில் தயாரிக்கப்பட்ட இந்த ரயில் புதன்கிழமைதான் பரிசோதனைக்காக விசாகப்பட்டினத்துக்கு கொண்டு வரப்பட்டது. அன்று இரவே கல்வீச்சு சம்பவம்நடைபெற்றுள்ளது. இதில் ஒரு ஜன்னல் கண்ணாடி முழுமையாக உடைந்து சிதறியது. மற்றொரு கண்ணாடி லேசாக சேதமடைந்தது.

ரயில் ஜன்னல் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் தொடா்பாக ரயில்வே போலீஸாா் விசாரணை நடத்தினா். ரயில்வே யாா்டு அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவா்கள் கற்களை வீசியதில் ரயில் சேதமடைந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. எனினும், இதில் வேறு நபா்களின் தொடா்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை தொடா்கிறது. ரயில்வே யாா்டு பகுதியில் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com