1 பில்லியன் டன் நிலக்கரி உற்பத்தி: கோல் இந்தியாவுக்கு அரசு இலக்கு!

2023-24 ஆம் ஆண்டில் 1 பில்லியன் டன் உலர் எரிபொருளை உற்பத்தி செய்யும் இலக்குடன், நிலக்கரி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
coal India Limited
coal India Limited

புதுதில்லி:  2023-24 ஆம் ஆண்டில் 1 பில்லியன் டன் உலர் எரிபொருளான (நிலக்கரி) உற்பத்தி செய்யும் இலக்குடன், நிலக்கரி அமைச்சகம் அறிவித்துள்ளது. அதே வேளையில் கோல் இந்தியா லிமிடெட் 780 மில்லியன் டன்களும், சிங்கரேணி காலீரீஸ் கம்பெனி லிமிடெட் 75 மில்லியன் டன்களும், கேப்டிவ் மற்றும் வணிக சுரங்கங்களுக்கு 162 மில்லியன் டன்களும் இலக்கு நிர்ணயிக்க முடிவு செய்யப்பட்டது.

கோல் இந்தியா லிமிடெட் கீழ் மொத்தம் 290 சுரங்கங்கள் செயல்படுகின்றன, அவற்றில் 97 சுரங்கங்களில் மட்டும் ஆண்டுக்கு 1 மில்லியன் டன்களுக்கு மேல் நிலக்கரி உற்பத்தி செய்கின்றன.

கோல் இந்தியா லிமிடெட் மற்றும் அதன் துணை நிறுவனங்களும் கலந்து கொண்ட ஆய்வு கூட்டத்தில் நிலக்கரி செயலாளர் அம்ரித்லால் மீனா நடத்திய பேச்சு வார்த்தையில் இந்த இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டன.

இந்த நிதியாண்டில் இதுவரை 513 மில்லியன் டன் நிலக்கரியை மட்டுமே உற்பத்தி செய்துள்ள கோல் இந்தியா லிமிடெட், 2021 - 2022ல் 622 மில்லியன் டன்களை உற்பத்தி செய்திருப்பதால், 2023 - 2024ல் 1 பில்லியன் டன் நிலக்கரி உற்பத்தி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

அதே வேளையில் ஆய்வு கூட்டத்தில், நிலம் கையகப்படுத்துதல், வனம் மற்றும் சுற்றுச்சூழல் அனுமதி மற்றும் 97 சுரங்கங்களின் ரயில் மற்றும் சாலை இணைப்பு தொடர்பான பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டு காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டது.

மொத்தமுள்ள 97 நிலக்கரி சுரங்கங்களில் 41 சுரங்கங்கள் மட்டுமே மேற்கூறிய பிரச்சனைகளை எதிர்கொள்வதாக இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com