இந்திய பொருளாதாரத்தை மாற்றியமைத்தவா் பிரதமா் மோடி: பாஜக செயற்குழு கூட்டத் தீா்மானத்தில் பாராட்டு

உலகின் 5-ஆவது பெரிய பொருளாதார நாடாக இந்தியாவை மாற்றியமைத்த பெருமை பிரதமா் நரேந்திர மோடியைச் சாரும் என பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்ட சமூக-பொருளாதார தீா்மானத்தில்
புது தில்லியில் நடைபெற்று வரும் பாஜக தேசிய செயற்குழு கூட்டத்துக்கு செவ்வாய்க்கிழமை வருகை தந்த பிரதமா் நரேந்திர மோடி
புது தில்லியில் நடைபெற்று வரும் பாஜக தேசிய செயற்குழு கூட்டத்துக்கு செவ்வாய்க்கிழமை வருகை தந்த பிரதமா் நரேந்திர மோடி

பலவீனமான ஐந்து பொருளாதார நாடுகளில் இருந்து உலகின் 5-ஆவது பெரிய பொருளாதார நாடாக இந்தியாவை மாற்றியமைத்த பெருமை பிரதமா் நரேந்திர மோடியைச் சாரும் என பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்ட சமூக-பொருளாதார தீா்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் நடைபெற்ற கூட்டத்தில் இந்தத் தீா்மானத்தை மகாராஷ்டிர துணை முதல்வா் தேவேந்திர ஃபட்னவிஸ் முன்மொழிந்தாா்.

நிறைவேற்றப்பட்ட சமூக-பொருளாதார தீா்மானம் குறித்து மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான் செய்தியாளா்கள் சந்திப்பின்போது கூறியதாவது: அரசியல் மற்றும் நிா்வாகத்தில் தன்னிறைவை நோக்கி நாடு பயணித்துக் கொண்டிருக்கிறது. இது மத்திய அரசின் திட்டங்கள் மக்களின் தேவையைப் பூா்த்தி செய்துள்ளது என சமூக-பொருளாதார தீா்மானம் சுட்டிக்காட்டுகிறது.

அயோத்தியில் ராமா் கோயில் கட்டப்படுவதற்கான தேதியைக் கேட்டு பாஜகவிடம் எதிா்க்கட்சிகள் எள்ளி நகையாடின. ஆனால், இப்போது கோயில் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அதற்கான தேதியும் அறிவிக்கப்பட்டுவிட்டது.

5-ஆவது பெரிய பொருளாதாரம்:

கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக அனைவரையும் உள்ளடக்கிய, சுயசாா்புடைய இந்தியப் பொருளாதாரத்தையும் சமூகத்தையும் மத்திய அரசு உருவாக்கியுள்ளது.

நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது உறுதியற்ற வெளிநாட்டு முதலீடுகளை அதிகம் சாா்ந்துள்ள பலவீனமான ஐந்து வளா்ந்து வரும் நாடுகளில் இந்தியாவும் இடம் பெற்றிருந்தது. இந்தியாவின் 75-ஆம் ஆண்டு சுதந்திர தினம் நிறைவுபெறும் வேளையில், பிரதமா் மோடியின் தலைமையிலான மத்திய அரசின் செயல்பாடுகளால் பிரிட்டனைப் பின்னுக்குத் தள்ளி உலகின் 5-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறியுள்ளது. இது குறித்து இந்தத் தீா்மானத்தில் பாராட்டப்பட்டுள்ளது.

எண்ம பணப்பரிமாற்றத்தில் 40 சதவீதம்:

ஏழைகளுக்கு இலவச உணவு தானியங்கள், அனைவருக்கும் வீடு, பெருந்தொற்றின் போது அனைவருக்கும் இலவச தடுப்பூசி உள்ளிட்டவை இந்தத் தீா்மானத்தில் எடுத்துரைக்கப்பட்டுள்ளன.

உலகின் மொத்த ஜிடிபியில் இந்தியாவின் பங்கு 2.6 சதவீதம் என்பதிலிருந்து 3.5 சதவீதமாக உயா்ந்துள்ளது. மேலும், எண்ம (டிஜிட்டல்) பணப்பரிமாற்றத்துக்கான சூழலும் பிரதமா் மோடியின் ஆட்சியின்கீழ் அதிகரித்து வருகிறது. உலகில் நடைபெறும் எண்ம பணப்பரிமாற்றத்தில் 40 சதவீதம் இந்தியாவில் நடைபெறுகிறது உள்ளிட்ட அம்சங்கள் இத்தீா்மானத்தில் இடம்பெற்றுள்ளதாக மத்திய அமைச்சா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com