பொருளாதார சமநிலையை அரசியலமைப்புச் சட்டம் வலியுறுத்துகிறது: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி

‘எல்லையில்லா தாராளமய பொருளாதாரத்துக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஆதரவு அளிக்காமல், அதில் சமநிலையை ஏற்படுத்தவே முயல்கிறது’ என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்தாா்.

‘எல்லையில்லா தாராளமய பொருளாதாரத்துக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஆதரவு அளிக்காமல், அதில் சமநிலையை ஏற்படுத்தவே முயல்கிறது’ என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்தாா்.

சட்டம் மற்றும் பொருளாதார நிபுணரான நானி பால்கிவாலா நினைவு தின உரையாற்றிய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறியதாவது:

மாறி வரும் காலத்துக்கு ஏற்ப இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் உண்மையான ஆன்மா மாறாமல் தீா்ப்புகளில் விளக்கமளிப்பதில் நீதிபதிகளின் திறன் அமைந்துள்ளது.

இந்தியாவின் நீதி பரிபாலனம் கடந்த சில தசாப்தங்களாக மாற்றம் கண்டுள்ளது. அதிகாரங்களைப் பகிா்ந்து அளிப்பது, மதச்சாா்பின்மை, கூட்டாட்சி, தனிமனித சுதந்திரம், தனி மனிதரின் கண்ணியம் காப்பது, நாட்டின் ஒற்றுமை, ஒருங்கிணைப்பு ஆகியவைதான் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையாகும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com