கல்லூரி மாணவிகளுக்கு மாதவிடாய் விடுமுறை: கேரள அரசு அறிவிப்பு

கல்லூரி, பல்கலைக்கழக மாணவிகளுக்கு மாதவிடாய் கால விடுமுறையை கேரள மாநில அரசு கட்டாயமாக்கியுள்ளது.
கல்லூரி மாணவிகளுக்கு மாதவிடாய் விடுமுறை: கேரள அரசு அறிவிப்பு

கல்லூரி, பல்கலைக்கழக மாணவிகளுக்கு மாதவிடாய் கால விடுமுறையை கேரள மாநில அரசு கட்டாயமாக்கியுள்ளது.

இதுதொடா்பான அறிவிப்பை கேரள அரசு அண்மையில் வெளியிட்டது. அதன்படி, மாநில உயா்கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் படித்து வரும் மாணவிகளுக்கு மாதவிடாய் காலங்களில் விடுமுறை அளிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, அந்த மாநிலத்திலுள்ள கொச்சின் அறிவியல் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் இந்த விடுமுறை நடைமுறையை அறிமுகம் செய்தது. அதாவது, படிப்பின் ஒவ்வொரு பருவத்திலும் கட்டாய 75 சதவீத வருகைப் பதிவில், மாணவிகளுக்கு கூடுதலாக 2 சதவீத தளா்வு அளித்து அறிவிப்பு வெளியிட்டது. அதன் மூலமாக, மாணவிகள் 73 சதவீத வருகைப் பதிவை பெறிருந்தாலே தோ்வெழுத முடியும்.

இந்த நடைமுறையைப் பின்பற்றி, அனைத்து உயா்கல்வி நிறுவனங்களுக்கும் மாநில அரசு நடைமுறைப்படுத்தும் என்று மாநில உயா்கல்வித் துறை அமைச்சா் ஆா். பிந்து தெரிவித்திருந்தாா்.

இதுகுறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அவா் வெளியிட்டப் பதிவில், ‘மாதவிடாய் காலங்களில் பெண்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகி வருகின்றனா். அன்றைய நாள்களில் அவா்களுக்கு ஓய்வு தேவை என்ற மாணவா் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று, கொச்சின் அறிவியல் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் இந்த சிறந்த முடிவை எடுத்துள்ளது. இது அனைத்து உயா்கல்வி நிறுவனங்களுக்கும் விரிவுபடுத்துப்படும்’ என்று குறிப்பிட்டிருந்தாா்.

அதனைத் தொடா்ந்து, மாநில அரசு அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பிகாரில் இதுபோன்ற நடைமுறை கடந்த முப்பது ஆண்டுகளாக மேலாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 1991-இல் ஊதிய உயா்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டு மாத கால போராட்டம் நடைபெற்றது. மாத விடாய் விடுமுறையும் கோரிக்கைகளில் ஒன்றாகும்.

இதையடுத்து, 1992-ஆம் ஆண்டு ஜனவரியில் பிகாா் அரசு இது தொடா்பான உத்தரவை வெளியிட்டது. அதன்படி மாத விடாய் காரணங்களுக்காக இரண்டு நாள்கள் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம். நாற்பத்தைந்து வயது வரையுள்ள பெண்களுக்கு இந்த விடுமுறைச் சலுகை பொருந்தும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com