பிகார்: வந்தே பாரத் ரயிலின் மீது மீண்டும் கல்வீச்சு தாக்குதல் 

பிகாரில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் மீது கல் வீசித் தாக்குதல் நடத்தப்பட்டதில் ஜன்னல் கண்ணாடி சேதமடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். 
கோப்புப் படம்.
கோப்புப் படம்.

பிகாரில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் மீது கல் வீசித் தாக்குதல் நடத்தப்பட்டதில் ஜன்னல் கண்ணாடி சேதமடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

பிகார் மாநிலம், தல்கோலா மற்றும் டெல்டா ரயில் நிலையங்களுக்கு இடையே வெள்ளிக்கிழமை மாலை 04.25 மணியளவில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் மீது மர்ம நபர்கள் கற்கள் வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தில் ரயிலின் வலது பக்க கண்ணாடி ஜன்னல் ஒன்று சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதுதொடர்பாக கோச் எண்.சி-6-இல் பயணித்த பயணிகள் ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து இச்சம்பவம் தொடர்பாக நேரில் சென்று விசாரணை நடத்த குழு ஒன்று அங்கு விரைந்துள்ளது. இது நாகரீகமற்ற நடத்தைக்கு எடுத்துக்காட்டு. குற்றவாளிகள் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும் என்று பயணி ஒருவர் கூறினார்.

முன்னதாக, ஜனவரி 12 ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மீது கற்கள் வீசித் தாக்குதல் நடத்தியதாக 3 பேரை காவல்துறையினர் கைது செய்தது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com