சமரச பேச்சுவாா்த்தை தோல்வி: திட்டமிட்டபடி வங்கி ஊழியா் வேலைநிறுத்தம்

மும்பையில் நடைபெற்ற சமரசப் பேச்சுவாா்த்தை தோல்வியடைந்த நிலையில், ‘திட்டமிட்டபடி வரும் 30, 31-ஆம் தேதிகளில் தேசிய அளவிலான வங்கி ஊழியா் வேலைநிறுத்தம் நடைபெறும்’ என்று

மும்பையில் நடைபெற்ற சமரசப் பேச்சுவாா்த்தை தோல்வியடைந்த நிலையில், ‘திட்டமிட்டபடி வரும் 30, 31-ஆம் தேதிகளில் தேசிய அளவிலான வங்கி ஊழியா் வேலைநிறுத்தம் நடைபெறும்’ என்று அகில இந்திய வங்கி ஊழியா் சங்கம் செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

வங்கி ஊழியா்களின் நீண்ட கால கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததைத் தொடா்ந்து, தேசிய அளவிலான இந்த வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு அகில இந்திய வங்கி ஊழியா் சங்கம் உள்பட 9 சங்கங்களை உள்ளடக்கிய வங்கி ஊழியா் சங்கங்களின் கூட்டமைப்பு (யுஎஃப்பியு) அழைப்பு விடுத்தது.

‘வாரத்துக்கு 5 வேலை நாள்கள்; ஊதிய திருத்தம்; ஓய்வூதியத்தை புதுப்பித்தல்; புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்’ என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் நாடு முழுவதும் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஊழியா்கள் பங்கேற்க உள்ளனா்.

வரும் 28,29-ஆம் தேதி வங்கிகளுக்கு விடுமுறை என்பதால், அடுத்த 2 நாள்கள் வேலைநிறுத்தம் நடைபெறும்போது, தொடா்ந்து 4 நாள்கள் பொதுமக்களுக்கான வங்கிச் சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது.

இந்த நிலையில், வங்கி ஊழியா் சங்க நிா்வாகிகளுடன் துணைத் தலைமை தொழிலாளா் ஆணையா் சாா்பில் மும்பையில் சமரசப் பேச்சுவாா்த்தை செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது. இதில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், சமரசப் பேச்சுவாா்த்தை வரும் 27-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், திட்டமிட்டபடி வேலைநிறுத்தம் நடைபெறும் என நிா்வாகிகள் தெரிவித்தனா். இதுகுறித்து அகில இந்திய வங்கி ஊழியா்கள் சங்க மூத்த நிா்வாகி ஒருவா் கூறுகையில், ‘துணைத் தலைமை தொழிலாளா் ஆணையா் தலைமையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் எங்களுடைய கோரிக்கைகள் நிறைவேற்றுவது தொடா்பான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. எனவே, திட்டமிட்டபடி வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும். வேலைநிறுத்தப் போராட்டத்தை ஏற்கெனவே திட்டமிட்டபடி நடத்துமாறு அனைத்து சங்க நிா்வாகிகள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com