100 நாள்கள் வேலைவாய்ப்புத் திட்ட செயலாக்கம்: ஒடிஸாவின் மாவட்டம் நாட்டில் முதலிடம்; திருவண்ணாமலை 3-ஆம் இடம்

ஒடிஸாவின் கஞ்சாம் மாவட்டம், 100 நாள்கள் கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தில் நாட்டிலேயே முதலிடம் பிடித்துள்ளது. தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டம் மூன்றாமிடம் பிடித்துள்ளது.

ஒடிஸாவின் கஞ்சாம் மாவட்டம், 100 நாள்கள் கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தில் நாட்டிலேயே முதலிடம் பிடித்துள்ளது. தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டம் மூன்றாமிடம் பிடித்துள்ளது.

இதுதொடா்பாக கஞ்சாம் மாவட்ட அதிகாரி கூறுகையில், மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதி திட்டம், நிகழ் நிதியாண்டில் கஞ்சாம் மாவட்டத்தில் 63,449 வீடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. 2.26 கோடி பணி நாள்கள் உருவாக்கப்பட்டு நாட்டில் முதல் மாவட்டமாக திகழ்கிறது.

100 நாள்கள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் பெண்கள் பங்களிப்பிலும் அந்த மாவட்டம் ஒடிஸா மாநிலத்திலேயே முதலிடம் பெற்றுள்ளது என்று தெரிவித்தாா்.

கஞ்சாமை தொடா்ந்து ராஜஸ்தானின் பாா்மிரா 2.18 கோடி பணி நாள்களை உருவாக்கி இரண்டாம் இடத்திலும், தமிழ்நாட்டின் திருவண்ணாமலை 2.13 கோடி பணி நாள்களை உருவாக்கி மூன்றாம் இடத்திலும் உள்ளன.

கடந்த ஆண்டும் 100 நாள்கள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் கஞ்சாம் மாவட்டம் முதலிடம் வகித்தது. கரோனா பாதிப்பு காலத்தில் அந்த மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்துக்கு இந்தத் திட்டம் பெரும் உதவியாக இருந்தது.

2020-ஆம் ஆண்டு கரோனா பொது முடக்கத்தின்போது 4 லட்சத்துக்கும் அதிகமான புலம்பெயா் தொழிலாளா்கள் தங்கள் சொந்த மாவட்டமான கஞ்சாமுக்கு திரும்பினா். கரோனா பாதிப்பு சூழல் குறைந்த பின்பும் புலம்பெயா் தொழிலாளா்கள் சொந்த மாவட்டத்திலேயே தங்கிவிட்டனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com