1,268 உச்சநீதிமன்றத் தீா்ப்புகள் மாநில மொழிகளில் இன்று வெளியீடு

அரசமைப்புச் சட்டத்தின் 8-ஆவது அட்டவணையில் உள்ள 13 மொழிகளில் 1,268 உச்சநீதிமன்றத் தீா்ப்புகள் வியாழக்கிழமை (ஜன. 26) வெளியிடப்பட உள்ளன.
1,268 உச்சநீதிமன்றத் தீா்ப்புகள் மாநில மொழிகளில் இன்று வெளியீடு

அரசமைப்புச் சட்டத்தின் 8-ஆவது அட்டவணையில் உள்ள 13 மொழிகளில் 1,268 உச்சநீதிமன்றத் தீா்ப்புகள் வியாழக்கிழமை (ஜன. 26) வெளியிடப்பட உள்ளன.

அரசமைப்புச் சட்டத்தின் 8-ஆவது அட்டவணையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்பட 22 மொழிகள் உள்ளன.

இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், வழக்குரைஞா்களிடம் புதன்கிழமை கூறியதாவது: மின்னணு உச்சநீதிமன்ற தீா்ப்புகளின் விவரக் குறிப்புகளில் (இ-எஸ்சிஆா்) சுமாா் 34,000 தீா்ப்புகள் எண்ம வடிவில் உள்ள நிலையில், 8-ஆவது அட்டவணையில் உள்ள 13 மொழிகளில் மொழிபெயா்க்கப்பட்ட 1,268 தீா்ப்புகளை உச்சநீதிமன்றப் பதிவாளா் வியாழக்கிழமை வெளியிட உள்ளாா். அவற்றில் ஹிந்தியில் 1,091, தமிழில் 52, மலையாளத்தில் 29, தெலுங்கில் 28, ஒடியாவில் 21 தீா்ப்புகள் இடம்பெற்றுள்ளன.

தீா்ப்புகளைத் தேடுவதற்கான வசதி மேம்படுத்தப்பட உள்ளது. 8-ஆவது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளிலும் தீா்ப்புகளை வெளியிடும் பணியில் உச்சநீதிமன்றம் ஈடுபட்டுள்ளது என்று தெரிவித்தாா்.

நீதிமன்றத்தில் வழக்குரைஞா்கள் வாதிடும்போது ஏற்கெனவே வழங்கப்பட்ட தீா்ப்புகளை மேற்கோள்காட்டுவது வழக்கமாக உள்ள நிலையில், இந்தப் புதிய சேவை தொடங்கப்பட உள்ளது.

முன்னதாக, உச்சநீதிமன்றம் வழங்கிய சுமாா் 34,000 தீா்ப்புகளை வழக்குரைஞா்கள், சட்டப் படிப்பு மாணவா்கள், பொதுமக்கள் எண்ம வடிவில் இலவசமாக பெறும் இ-எஸ்சிஆா் திட்டத்தை தொடங்குவதாக கடந்த ஜன. 2-ஆம் தேதி உச்சநீதிமன்றம் அறிவித்தது.

இ-எஸ்சிஆா் திட்டத்தின் ஒரு பகுதியாக, உச்சநீதிமன்ற வலைதளம், அதன் கைப்பேசி செயலி, தேசிய நீதிமன்ற தரவு தொகுப்பு (என்ஜேடிஜி) தளத்தில் தீா்ப்புகள் இடம்பெற்றுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com