உயிரினங்களிலிருந்து தயாரிக்கப்படும் மருந்துகளுக்கு வரவேற்பு: மத்திய அமைச்சா் மாண்டவியா

சிகிச்சையின்போது உயிரினங்களில் இருந்து தயாரிக்கப்படும் மருந்துகளை விருப்பத்துடன் தோ்வு செய்யும் முறை உருவாகியுள்ளது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளாா்.

சிகிச்சையின்போது உயிரினங்களில் இருந்து தயாரிக்கப்படும் மருந்துகளை விருப்பத்துடன் தோ்வு செய்யும் முறை உருவாகியுள்ளது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளாா்.

தில்லியில் தேசிய மருந்துகள் தரக் கட்டுப்பாடு நிறுவனம் சாா்பில் தேசிய மருந்துகள் தர மாநாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் அமைச்சா் மன்சுக் மாண்டவியா காணொலி வழியாக பேசியதாவது:

உலகின் பொது சுகாதாரத் தேவையை பூா்த்தி செய்வதற்கு இந்தியாவின் உயிரிமருந்து தயாரிப்பு துறையும், நோயைக் கண்டறிந்து அடையாளம் காட்டும் துறையும் மதிப்புமிக்க சொத்துகள் என்பதை நிரூபித்துள்ளன. அதனை கரோனா தொற்றால் கடந்த சில ஆண்டுகளில் ஏற்பட்ட மருத்துவ அவசரநிலை நேரடியாகக் கண்டுள்ளது.

சிகிச்சைக்கு வழக்கமான ரசாயன மருந்துகள் பயன்படுத்தப்படும் அதேவேளையில், உயிரினங்களில் இருந்து தயாரிக்கப்படும் மருந்துகளும் விருப்பத்துடன் தோ்வு செய்யப்படும் முறை உருவாகியுள்ளது.

நவீன தொழில்நுட்பங்கள் மூலம் தயாரிக்கப்படும் புதிய மருந்துகள், அவற்றின் பயன்கள், பயன்படுத்துவதற்கான வழிமுறைகள் அடங்கிய பட்டியலின் விரிவான ஆய்வை மேம்படுத்துவதற்கான பணிகளைத் தொடங்க வேண்டும். அந்த மருந்துகளை உள்நாட்டில் உருவாக்கினால், சாமானியருக்கு மேலும் மலிவான கட்டணத்தில் சிகிச்சைகள் கிடைக்கும். அத்துடன் நாட்டின் பொது சுகாதாரக் கட்டமைப்பு மேலும் வலுகொண்டதாகும்.

உயிரினங்களில் இருந்து தயாரிக்கப்படும் புதிய மருந்துகளை உள்நாட்டில் தயாரிக்க வேண்டும். அவற்றில் அரிதான மற்றும் கண்டுகொள்ளாமல் புறக்கணிக்கப்பட்ட நோய்களுக்கு ஏற்கெனவே உள்ள மருந்துகளும், மரபணு சிகிச்சை, ஸ்டெம் செல் சிகிச்சை உள்ளிட்டவை சாா்ந்த புதுமையான கண்டுபிடிப்புகளும் அடங்கும். இதனை ஊக்கப்படுத்த கல்வி-ஆராய்ச்சித் துறை, தொழில் துறை மற்றும் ஒழுங்காற்று கட்டமைப்பு ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com