
குஜராத்: சூரத்தில் இருச்சக்கர வாகனம் மீது கார் மோதி, காரின் அடியில் சிக்கி 12 கிலோமீட்டர் இழுத்துச் சென்றவர் இறந்த நிலையில், காரின் உரிமையாளரை குஜராத் போலீஸார் வியாழக்கிழமை கைது செய்துள்ளனர்.
கடந்த டிசம்பம் மாதம் 18 ஆம் தேதி குஜராத் மாநிலம் சூரத் நகரின் புறநகர்ப் பகுதியில் உள்ள பல்சானா நெடுஞ்சாலையில் இருச்சக்கர வாகனத்தில் சென்றவர்கள் மீது கார் மோதிவிட்டு கார் நிற்காமல் சென்றது. இருச்சக்கர வாகனத்தில் சென்றவர் அந்த காரின் அடியில் சிக்கிக்கொண்டு தொடர்ந்து 12 கிலோ மீட்டர் தூரம் இழுத்துச் சென்றதில் அவர் உயிரிழந்தார்.
இதையும் படிக்க | அதானி குழுமத்தில் எல்ஐசியின் ரூ. 74 ஆயிரம் கோடி, ஸ்டேட் வங்கியின் 40% நிதி!!
இதுகுறித்து சூரத் கிராமப்புற துணைக் காவல் கண்காணிப்பாளர் இலேஷ் படேல் கூறுகையில், இருச்சக்கர வாகனத்தில் சென்றவர் மீது கார் மோதிய வேகத்தில் இருச்சக்கர வாகனத்தில் சென்றவர் கீழே விழுந்து காருக்குள் சிக்கிக் கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து கார் வேகமாக சென்றுள்ளது. இதனை பார்த்தோர் செல்போனில் விடியோ எடுத்துக்கொண்டே காரை விரட்டிச் சென்றுள்ளனர். அதனை பார்த்தவர் காரை நிறுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார். முதலில் மும்பை, பின்னர் ராஜஸ்தான் என தலைமறைவாக இருந்துள்ளார். கடைசியாக அவரது செல்போன் மூலம் அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடித்த போலீசார் வியாழக்கிழமை காம்ரேஜ் சுங்கச்சாவடியில் நுழையும் போது அவரை கைது செய்தனர்.
விபத்து நடந்த இடத்தில் இருந்து 12. கிமீ தொலைவில் காருக்கு அடியில் சிக்கி உயிரிழந்த பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது. உயிரிழந்தவர் சாகர் பாட்டீல் என்றும், அவரது கணவர் பிலியன் என்றும், காரை ஓட்டிச் சென்ற பிரேன் லடுமோர் அஹிர் கட்டுமானத் தொழிலதிபர் என்பது தெரியவந்துள்ளதாக படேல் கூறினார்.