பனிமழையில் விளையாடும் ராகுல் - பிரியங்கா! வைரலாகும் விடியோ

ஒற்றுமை நடைப்பயணத்தின் நிறைவு விழாவில், ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் பனிக்கட்டியை தூக்கி அடித்து வீசி விளையாடிய விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 
பனிமழையில் விளையாடும் ராகுல் - பிரியங்கா! வைரலாகும் விடியோ

ஒற்றுமை நடைப்பயணத்தின் நிறைவு விழாவில், ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் பனிக்கட்டியை தூக்கி அடித்து வீசி விளையாடிய விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைப்பயணம் இன்று ஜம்மு-காஷ்மீரில் நிறைவு பெற்றது. கன்னியாகுமரி முதல் காஷ்மீா் வரையிலான இந்திய ஒற்றுமை நடைப்பயணம், கடந்த ஆண்டு செப்டம்பா் 7-ஆம் தேதி தொடங்கப்பட்டது. 3,500 கி.மீ. தொலைவு கொண்ட இந்த நடைப்பயணம், பல்வேறு மாநிலங்கள் வழியாக மேற்கொள்ளப்பட்டது.

கடந்த 13ஆம் தேதி ஜம்மு-காஷ்மீருக்குள் நுழைந்த இந்த பயணம், ஸ்ரீநகரில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் இன்றுடன் நிறைவு பெற்றது. 

நிறைவு விழாவில் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் ராகுல் காந்தி தேசியக் கொடியேற்றினார். 136 நாள்கள் நடைபெற்ற இந்த பயணம் வெற்றிகரமாக நிறைவு பெறுவதையொட்டி அனைவரும் மகிழ்ச்சிகளைப் பகிர்ந்துகொண்டனர். 

அப்போது அருகிலிருந்த பிரியங்கா வதேராவுடன், ராகுல் காந்தி பனிக்கட்டிகளை வீசி எறிந்து தனது அன்பை வெளிப்படுத்தினார். பிரியங்கா வதேராவும் பனிக்கட்டிகளை ராகுல் மீது எறிந்து விளையாடினர். இந்த விடியோவை ராகுல் காந்தி தனது சுட்டுரை பதிவில் பகிர்ந்துள்ளார். இந்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com