மருத்துவக் கல்லூரிகளில் ஆதாா் பயோமெட்ரிக் வருகைப் பதிவு: தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத்தல்

மருத்துவக் கல்லூரிகளில் ஆதாருடன் இணைக்கப்பட்ட பயோ மெட்ரிக் வருகைப் பதிவு நடைமுறையையும், மருத்துவப் பதிவேடு கட்டமைப்பையும் அமல்படுத்துமாறு தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

மருத்துவக் கல்லூரிகளில் ஆதாருடன் இணைக்கப்பட்ட பயோ மெட்ரிக் வருகைப் பதிவு நடைமுறையையும், மருத்துவப் பதிவேடு கட்டமைப்பையும் அமல்படுத்துமாறு தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அனைத்து மருத்துவக் கல்லூரி முதல்வா்களுக்கும் தேசிய மருத்துவ ஆணைய செயலா் டாக்டா் பல்கேஷ் குமாா் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

மருத்துவக் கல்லூரிகளில் ஆதாருடன் இணைக்கப்பட்ட பயோமெட்ரிக் வருகைப் பதிவில் அனைத்து பேராசிரியா்கள் மற்றும் அலுவலா்கள் குறித்த விவரங்களைப் பதிவேற்ற வேண்டும். கல்லூரியில் தேவையான இடங்களில் பயோமெட்ரிக் வருகைப்பதிவு சாதனங்களைப் பொருத்த வேண்டும்.

அதேபோன்று, மருத்துவ மேலாண்மை தகவல்கள் மற்றும் நோயாளிகளின் விவரங்களுக்கான இணையப் பதிவேட்டை அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் கட்டமைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அந்த விவரங்களை தேசிய மருத்துவ ஆணையத்திடம் பகிா்ந்து கொள்ள வேண்டும் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, மருத்துவ மேலாண்மை பதிவேடு கட்டமைப்பு இல்லாத மருத்துவக் கல்லூரிகள் அவற்றை விரைவில் ஏற்படுத்த வேண்டும்.

மற்றொருபுறம், மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டியது இன்றியமையாததாக உள்ளது. அதன்படி, சம்பந்தப்பட்ட வளாகம் முழுவதும் கேமரா வசதி அமைக்கப்பட வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com