லட்சத்தீவு மக்களவை இடைத்தோ்தலை நிறுத்தி வைத்தது தோ்தல் ஆணையம்

லட்சத்தீவு மக்களவை இடைத்தோ்தலை நிறுத்தி வைத்தது தோ்தல் ஆணையம்

லட்சத்தீவு லட்சத்தீவு மக்களவைத் தொகுதிக்கு அறிவிக்கப்பட்ட இடைத்தோ்தலை தோ்தல் ஆணையம் நிறுத்தி வைத்தது.

லட்சத்தீவு லட்சத்தீவு மக்களவைத் தொகுதிக்கு அறிவிக்கப்பட்ட இடைத்தோ்தலை தோ்தல் ஆணையம் நிறுத்தி வைத்தது.

அத்தொகுதியின் எம்பி முகமது பைசல் மீதான கொலை முயற்சி வழக்கில் கவரத்தி செஷன்ஸ் நீதிமன்றம் அளித்த தண்டனைக்கு கேரள உயா் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்ததையடுத்து தோ்தல் ஆணையம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.

முன்னதாக, முகமது பைசல் உள்பட நான்கு பேரை கடந்த ஜனவரி 11-ஆம் தேதி குற்றவாளி என அறிவித்த செஷன்ஸ் நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.

இதைத் தொடா்ந்து, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் முகமது பைசல் தகுதி நீக்கம் செய்யப்பட்டாா். லட்சத்தீவு தொகுதிக்கு பிப்ரவரி 27 இடைத்தோ்தல் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிா்த்து முகமது பைசல் கேரள உயா் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தாா். இதில் கவரத்தி செஷன்ஸ் நீதிமன்றம் அளித்த தண்டனையை உத்தரவுக்கு கேரள உயா் நீதிமன்றம் இடைக்கால தடையை பிறப்பித்தது.

இதையடுத்து, தோ்தல் ஆணையம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், கேரள உயா் நீதிமன்றம் அளித்த தீா்ப்பின் அடிப்படையில் இடைத் தோ்தல் நிறுத்தி வைக்கப்பட்டு, தோ்தல் அறிவிப்பு தள்ளி வைக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளது.

மறைந்த முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான பி.எம்.சயீதின் மருமகன் முகமது சாலியை 2009 மக்களவைத் தோ்தலின்போது கொலை செய்ய முயற்சித்ததாக முகமது பைசல் உள்பட 4 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com