பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

தண்ணீரில் தத்தளிக்கும் தில்லி சாலைகள்: கடும் போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதி!

தலைநகர் தில்லியில் யமுனை ஆற்றின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் பல இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் கடுமையாக  பாதிக்கப்பட்டுள்ளனர்.

Published On :

தலைநகர் தில்லியில் யமுனை ஆற்றின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் பல இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் கடுமையாக  பாதிக்கப்பட்டுள்ளனர். 

வடமாநிலங்களில் பெய்த கனமழையால் யமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், ஹரியாணா, உத்தரகண்ட், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. 

Story image

கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத வகையில் யமுனை ஆற்றின் நீர்மட்டம் அபாய அளவை தாண்டிய நிலையில், தில்லியில் உள்ள பல சாலைகளை ஆற்று நீர் மூழ்கடித்துள்ளது. 

யமுனை ஆற்றின் நீர்மட்டம் 208.48 மீட்டரை தாண்டியுள்ள நிலையில் அம்மாநிலத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற உத்தரவிட்டுள்ளது. 

Story image

தில்லி பழைய ரயில்வே பாலம் மூடப்பட்டுள்ளது. ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். 

தலைநகர் முழுவதும் உள்ள பல சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், வாகன ஓட்டுகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். வெள்ள நீர் புகுந்ததால் பல இடங்களில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளன. சாலைகளில் போக்குவரத்து ஆமை வேகத்தில் நகர்ந்து வருவதால் மக்கள் குறித்த நேரத்திற்குச் செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகியுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.