மத்திய, மாநில அரசுத் துறைகளில் 70,126 பேருக்கு பணி நியமன ஆணைகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி வாயிலாக வழங்கினார்.
'ரோஜ்கர் மேளா' என்ற மெகா வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை அளிக்கும்பொருட்டு பணிக்கான ஆணைகளை வழங்கி வருகிறது.
இந்நிலையில் இத்திட்டத்தின் கீழ் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணி அளவில் காணொலி நிகழ்ச்சி மூலமாக 70,126 பேருக்கு பணி நியமன ஆணைகளை பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார்.
மேலும் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, 'இந்தியா சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் இந்த வேளையில், அரசுப்பணியில் சேருபவர்களுக்கு இது முக்கியமான காலகட்டம். இப்போது புதிதாக நியமிக்கப்படுபவர்கள் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவை வளர்ந்த நாடாக்கும் முயற்சியில் இருப்பார்கள்' என்றார்.
ரோஜ்கர் மேளாவில் இதுவரை 3,58,000 பணி நியமன ஆணைகள் வழங்ப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | ஹரியாணாவில் விவசாயிகள் 2-வது நாளாக போராட்டம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு!

யுபிஎஸ்சி: இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமைகள்!

பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!

பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோயிலில் நரசிம்ம ஜெயந்தி சிறப்பு வழிபாடு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

