பிபா்ஜாய் புயலால் 80,000 மின்கம்பங்கள் பாதிப்பு: குஜராத் அமைச்சர்

பிபா்ஜாய் புயலால் 80,000 மின்கம்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்று குஜராத் அமைச்சர் ருஷிகேஷ் படேல் தெரிவித்துள்ளார். 
பிபா்ஜாய் புயலால் 80,000 மின்கம்பங்கள் பாதிப்பு: குஜராத் அமைச்சர்

பிபா்ஜாய் புயலால் 80,000 மின்கம்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்று குஜராத் அமைச்சர் ருஷிகேஷ் படேல் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் கூறியதாவது, முன்னெச்சரிக்கையாக 54,000 பேர் இடமாற்றப்பட்டதால் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். குஜராத்தின் கட்ச், செளராஷ்டிரா கடலோரப் பகுதியில் பலத்த காற்று, மழையுடன் ஜாக்கவ் துறைமுகம் அருகே வியாழக்கிழமை மாலை பிபா்ஜாய் புயல் கரையைக் கடந்தது. இதனால் துவாரகா, ஒக்லா, நாலியா, புஜ், போா்பந்தா், கண்ட்லா, மாண்டவி ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்தது. 

கட்ச் மாவட்டத்தில் பலத்த காற்றும், மழையால் பல இடங்களில் மரங்கள் வேரொடு சாய்ந்தன. மின்சாரக் கம்பங்களும் பல இடங்களில் விழுந்தன. 8 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் 80,000 மின்கம்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன, விரைவில் சீர்செய்யப்படும். புயலால் வேரோடு சாய்ந்த மரங்களை அகற்றவும், சாலைகளை சரி செய்யவும் 5 குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 

கச்ச மாவட்டம் முழுவதும் 855 மிமீ மழை பதிவாகியுள்ளது என்றார். இதனிடையே குஜராத்தில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அகமதாபாத்தின் வானிலை ஆய்வு மைய இயக்குநர் மனோரமா மொஹந்தி தெரிவித்தார். குஜராத்தின் கட்ச், செளராஷ்டிரா கடலோரப் பகுதியில் பலத்த காற்று, மழையுடன் ஜாக்கவ் துறைமுகம் அருகே வியாழக்கிழமை மாலை பிபா்ஜாய் புயல் கரையைக் கடந்தது.

இதனால் துவாரகா, ஒக்லா, நாலியா, புஜ், போா்பந்தா், கண்ட்லா, மாண்டவி ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்தது. கட்ச் மாவட்டத்தில் பலத்த காற்றும், மழையால் பல இடங்களில் மரங்கள் வேரொடு சாய்ந்தன. மின்சாரக் கம்பங்களும் பல இடங்களில் விழுந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com