மல்யுத்த சம்மேளனத் தலைவா் பிரிஜ் பூஷண் மீதான பாலியல் குற்றச்சாட்டை திரும்பப் பெற சிறுமியின் குடும்பத்துக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாக மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார்.
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் (டபிள்யுஎஃப்ஐ) தலைவா் பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது பாலியல் வன்முறை குற்றச்சாட்டு சுமத்திய மல்யுத்த வீராங்கனைகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதுதொடர்பாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர், அமித் ஷா ஆகியோரும் மல்யுத்த வீராங்கனைகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
எனினும் ரயில்வே துறையில் தாங்களுக்கு அளிக்கப்பட்ட அலுவல்சாா் பணிகளை நிறைவேற்ற மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பணியில் இணைந்துள்ளனர். பிரஜ் பூஷணை கைது செய்யும் வரை போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக தில்லி காவல்துறையினர், பிரஜ் பூஷணுக்கு எதிராக தில்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் வியாழக்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
அதில், சிறுமி ஒருவர் அளித்த புகாருக்கு ஆதாரங்கள் இல்லை என்பதால் பிரிஜ் பூஷண் மீதான போக்ஸோ வழக்கை கைவிட வேண்டும் என்றும் தில்லி போலீசார் வலியுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில், பிரஜ் பூஷண் மீதான வழக்கை திரும்பப் பெறக் கோரி பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாக சாக்ஷி மாலிக் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார்.
மேலும், குற்றப் பத்ரிகையில் பிரஜ் பூஷண் பெயர் இடம்பெற்றுள்ளதாகவும், பிற கோரிக்கைகளை அரசு பரிந்துரை செய்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

இந்தியாவில் சர்க்கரை உற்பத்தி 12.43% அதிகரிப்பு!
கோமா நிலையில் இருந்த கமேனி மனைவி மரணம்..!
துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!

கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: எண்ணெய், பெயிண்ட் பங்குகள் சரிவுடன் நிறைவு!
வீடியோக்கள்

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பின் திருமாவளவன் பேட்டி! | Thirumavalavan | DMK | VCK
தினமணி வீடியோ செய்தி...

காற்றில் ஊழல் செய்த கட்சி திமுக: எடப்பாடி பழனிசாமி | Edappadi Palaniswami
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | சஹிப்ஸதா ஃபர்ஹான் மட்டும் அடித்தால் போதுமா?: கோட்டைவிட்ட பாகிஸ்தான்! | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

உறுதியாகும் பாஜக தொகுதிகள் ? | Admk | Bjp | Modi in madurai | Thiruparankundram visit | EPS
தினமணி வீடியோ செய்தி...

