இந்த சர்வாதிகார அரசு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் எதிர்காலத்தில் தேர்தல் இருக்காது: மம்தா பானர்ஜி

2024 நாடாளுமன்றத் தேர்தலில் தற்போதைய சர்வாதிகார அரசு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் எதிர்காலத்தில் தேர்தலே இல்லாமல் போகலாம் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரித்துள்ளார்.
இந்த சர்வாதிகார அரசு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் எதிர்காலத்தில் தேர்தல் இருக்காது: மம்தா பானர்ஜி

2024 நாடாளுமன்றத் தேர்தலில் தற்போதைய சர்வாதிகார அரசு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் எதிர்காலத்தில் தேர்தலே இல்லாமல் போகலாம் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரித்துள்ளார்.

2024 மக்களவைத் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைந்த கூட்டம் பிகார் தலைநகர் பாட்னாவில் நிதீஷ் குமார் தலைமையில் இன்று  நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியதாவது: இந்த சர்வாதிகார அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்தால் எதிர்காலத்தில் தேர்தலே இருக்காது. நாங்கள் ஒற்றுமையாக உள்ளோம். நாங்கள் ஒற்றுமையாக போராடுவோம். எங்களை எதிர்க்கட்சி என்று அழைக்காதீர்கள். நாங்கள் தேசபக்தி நிறைந்தவர்கள். நாங்கள் பாரத மாதாவை நேசிக்கின்றோம். மணிப்பூர் பற்றி எரியும்போது அதன் வலியை நாங்கள் உணர்கிறோம். பாஜக சர்வாதிகார ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறது. பாட்னாவில் எந்த ஒரு விஷயம் தொடங்கப்பட்டாலும் அது மக்கள் இயக்கமாக மாறிவிடும். நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட தீர்மானித்துள்ளோம். நாங்கள் ஒன்றிணைந்து பாஜகவுக்கு எதிராக போராடுவோம்.

பாஜக வரலாற்றை மாற்ற நினைக்கிறது. ஆனால், நாங்கள் வரலாறு பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வோம். பாஜகவுக்கு எதிராக பேசும் தலைவர்களுக்கு எதிராக அராஜகம் கட்டவிழ்த்துவிடப்படுகிறது. பாஜகவுக்கு எதிராக பேசும் தலைவர்கள் குறிவைக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு எதிராக பேசுபவர்களை அச்சுறுத்த அமலாக்கத் துறை, சிபிஐ போன்ற விசாரணை அமைப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. அவர்கள் சாதாரண மக்கள், வேலைவாய்ப்பின்மை, தலித்துகளுக்கு எதிராக நடைபெறும் கொடுமைகள், பெண்கள் குறித்து கவலைப்படத் தயாராக இல்லை. இந்தியப் பொருளாதாரம் அழிக்கப்பட்டு வருகிறது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com