ஹைதராபாத் அருகே 1,000 வருட பழமையான ஜெயின் சிற்பங்கள் கண்டுபிடிப்பு!

ஹைதராபாத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஜெயின் சிற்பங்கள் மற்றும் கல்வெட்டுகள், சதுர தூண்கள் ஆகியவற்றைக் கண்டறியப்பட்டுள்ளது. 

ஹைதராபாத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஜெயின் சிற்பங்கள் மற்றும் கல்வெட்டுகள், சதுர தூண்கள் ஆகியவற்றைக் கண்டறியப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர் சிவனகி ரெட்டி கூறுகையில், 

ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள மொயினாபாத் மண்டலத்தில் உள்ள இனிகாபள்ளி கிராமத்தில் ஆய்வு செய்தபோது ஜெயின் சிற்பங்கள் மற்றும் கல்வெட்டுக்கள் கிடைத்தது. இவை அனைத்தும் 9-ஆம், 10-ஆம் நூற்றாண்டுகளை சேர்ந்தவையாகும். 

மேலும், இரண்டு தூண்களில் ஒன்று கிரானைட், மற்றொன்று கருப்பு பாசால்ட் ஆகும். ஆதிநாத், நெமிநாத், பார்ஸ்வநாதா மற்றும் வர்தமண மகாவீர் ஆகியோர் தியானத்தில் அமர்ந்திருப்பது போன்ற சிற்பங்கள் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், கல்வெட்டுகளில் தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் எழுதப்பட்டிருந்தது. ஆனால் அவை புரிந்துகொள்ள இயலாத வகையில் செதுக்கப்பட்டுள்ளது. 

சிலுக்கூர் அருகே சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஜெயின் மடாலயம் இருந்ததாகக் கூறப்படுகிறது. அந்த இடத்தில் தற்போது பெருமாள் கோயில் ஒன்று உள்ளது. 

இதனிடையே, யாதாத்ரி மாவட்டத்தில் உள்ள கோலனுபாகா கிராமத்தில் பிரபலமான சமண கோயில் உள்ளது. இந்த கோயில் ஹைதராபாத்திலிருந்து சுமார் 77 கி.மீ தொலைவில் உள்ளது. சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. 

நான்காம் நூற்றாண்டுக்கு முன்னர் தெலங்கானாவில் சமண மதம் நடைமுறையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com