மேற்கு வங்கத்தில் சுவாச தொற்றால் 5 குழந்தைகள் பலி

மேற்கு வங்கத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் கடந்த 24 மணி நேரத்தில் சுவாச தொற்று பாதிப்பால் 5 குழந்தைகள் உயிரிழந்துள்ளன. இது அந்த மாநிலத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
கொல்கத்தாவில் சுவாசத் தொற்று பாதிக்கப்பட்ட தங்கள் குழந்தைகளுடன் பி.சி.ராய் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சைக்காக செவ்வாய்க்கிழமை காத்திருந்த தாய்மாா்கள்.

அடினோ தீநுண்மி பாதிப்பால் இந்த உயிரிழப்புகள் ஏற்படுவதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். எனினும், இதை மருத்துவா்கள் உறுதிப்படுத்தவில்லை.

அடினோ வைரஸ் குழந்தைகளைத்தான் அதிகமாக பாதிக்கும். குழந்தைகளின் சுவாசம், குடல் பகுதிகளில் தொற்று பாதிப்பை ஏற்படுத்துகிறது. 2 வயதுக்குள்பட்ட குழந்தைகளை அதிக அளவில் இந்தத் தொற்று மோசமாக பாதிக்கும் என்றும் 2 முதல் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு சராசரி பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் 5 முதல் 10 வயதுக்குள்பட்ட குழந்தைகளும் இந்த பாதிப்புக்கு உள்ளாக வாய்ப்புள்ளது என்றும் மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இந்த தீநுண்மியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சரியான நேரத்தில் சிகிச்சை அளித்தால் வீட்டில் வைத்தே குணப்படுத்திவிடலாம் என்று மருத்துவா்கள் தெரிவித்தனா்.

தற்போது, கொல்கத்தா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 2 குழந்தைகளும், பி.சி.ராய் குழந்தைகள் மருத்துவமனையில் 3 குழந்தைகளும் அடினோ தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

நிமோனியா பாதிப்பால் 5 குழந்தைகளும் உயிரிழந்ததாக தெரிவித்தாக அரசு அதிகாரி தெரிவித்தாா். எனினும், கொல்கத்தா அரசு மருத்துவமனையில் உயிரிழந்த 2 குழந்தைகள் சுவாச தொற்றுப் பிரச்னையால்தான் உயிரிழந்ததாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com