சமூக வலைதளங்கள் மீதான புகார்களைத் தெரிவிக்க குறைதீர் மேல்முறையீட்டுக் குழு தொடக்கம்

சமூக வலைதள பயனீட்டாளர்கள் தங்கள் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் நோக்கில் குறைதீர் மேல்முறையீட்டு குழுவை நாடுவதற்கான புதிய தளத்தை மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
சமூக வலைதளங்கள் மீதான புகார்களைத் தெரிவிக்க குறைதீர் மேல்முறையீட்டுக் குழு தொடக்கம்

சமூக வலைதள பயனீட்டாளர்கள் தங்கள் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் நோக்கில் குறைதீர் மேல்முறையீட்டு குழுவை நாடுவதற்கான புதிய தளத்தை மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
 சமூக வலைதள அமைப்புகளின் குறைதீர் அதிகாரிகளின் முடிவுகளில் திருப்தி ஏற்படாதபட்சத்தில் பயனீட்டாளர்கள் இந்த குறைதீர் மேல்முறையீட்டுக் குழு தளத்தில் (ஜிஏசி) விண்ணப்பித்து தீர்வு காணலாம். இந்த மேல்முறையீட்டு குழு என்பது இணையவழி சார்ந்த பிரச்னைகளுக்கு தீர்வு காணும் தளமாகும். புதுதில்லியில் மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் இந்தப் புதிய குறைதீர் மேல்முறையீட்டுக் குழு தளத்தை செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 பயனீட்டாளர்களுக்கு இணையதளங்கள் வெளிப்படையாகவும் பாதுகாப்பாகவும் நம்பிக்கைக்குரியதாகவும் இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் இந்தத் தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இணையவழி பிரச்னைகளைக் களைவதற்கான முயற்சிகளில் இது மேலும் ஒரு மைல்கல்லாகும். இந்த மேல்முறையீட்டுக் குழு தளத்தின் முக்கிய நோக்கம் குறைகளுக்குத் தீர்வு காண்பதை உறுதி செய்வதுதான். அந்த வகையில் பயனீட்டாளர்கள் தங்கள் இணையவழி பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்காத பட்சத்தில் ட்ற்ற்ல்ள்://ஞ்ஹஸ்ரீ.ஞ்ர்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் புகார் செய்யலாம்.
 சமூக வலைதள நிறுவன குறைதீர் அதிகாரிகளின் முடிவுகளுக்கு எதிராக பயனீட்டாளர்கள் இத்தளத்தில் புகார்களைப் பதிவு செய்யலாம். அதன்மூலம் அவர்களின் கரங்களை பலப்படுத்தும் நோக்கில் இப்புதிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஜிஏசி என்பது ஒரு குறைதீர் மேல்முறையீட்டுக் குழுவாகும்.
 சமூக வலைதள நிறுவனங்களில் உள்ள குறைதீர் அதிகாரிகள் தெரிவிக்கும் பதில்களில் திருப்தி ஏற்படாத பட்சத்தில் பயனீட்டாளர்கள் அந்த அதிகாரியின் தகவல் கிடைத்த நாளில் இருந்து 30 நாள்களுக்குள் இந்த மேல்முறையீட்டுக் குழுவில் விண்ணப்பிக்கலாம்.
 இந்த ஜிஏசி தளம் எண்மப் பயனீட்டாளர்களின் இணையதளம் சார்ந்த பிரச்னைகளில் நேரடியாக தலையீட்டு தீர்வு காணும். இணையதளம் பாதுகாப்பானது, நம்பிக்கைக்குரியது என்பதை உறுதிப்படுத்துவதோடு ஆன்லைன் மற்றும் சமூக வலைதள நிறுவனங்கள் கோடிக்கணக்கான எண்மப் பயனீட்டாளர்களுக்கு பொறுப்பளிக்கும் நிறுவனங்களாக இருத்தல் வேண்டும் என்பதே எங்கள் நோக்கமாகும். இந்தக் குறைதீர் மேல்முறையீட்டுக் குழு இணையதளங்களையும் எண்ம அதிகாரிகளையும் தங்கள் பணிகளை செவ்வனே செய்ய ஊக்குவிக்கும்.
 பொதுமக்கள் சார்பாக அவர்களின் புகார்களைத் தெரிவிக்க பிற அமைப்புகள் அனுமதிக்கப்படுவார்களா என்று கேட்கிறீர்கள். ஜிஏசி சேவையானது பொது சேவை மையங்களுக்கும் விரிவுபடுத்தப்படவுள்ளதால் சில உதவிகள் மேல்முறையீட்டாளர்களுக்கு வழங்கப்படும்.
 அத்துடன் இந்தத் தளத்தில் பயனீட்டாளர்களின் வசதிக்காக அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (எஃப்ஏக்யூ) என்ற பகுதியும் சேர்க்கப்பட்டுள்ளது. இத்தளத்தில் பயனீட்டாளர்கள் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி தங்கள் புகார்கள் மீதான தற்போதைய நிலவரம் குறித்த தகவலையும் அறிந்துகொள்ளலாம். இத்தளம் சார்ந்த புதிய உத்தரவுகள் தளத்தில் அவ்வப்போது பதிவேற்றம் செய்யப்படும். மேல்முறையீட்டாளர்களுக்கு இதன் அறிவிப்புகள் குறுஞ்செய்தியாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்கப்படும் என்றார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com