ஓயோ நிறுவனர் ரித்தேஷ் அகர்வாலின் தந்தை குருகிராமில் 20-வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஓயோ நிறுவனர் ரித்தேஷ் அகர்வாலின் தந்தை ரமேஷ் பிரசாத் அகர்வால். இவர் இன்று ஹரியாணா மாநிலம், குருகிராமில் உள்ள 20 வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளார். இதுகுறித்து காவல்துறை தரப்பில் தெரிவித்ததாவது, குருகிராமில் அமைந்துள்ள டிஎல்எஃப் அடுக்குமாடி குடியிருப்பின் 20 வது மாடியில் இருந்து மதியம் 1 மணியளவில் நபர் ஒருவர் விழுந்ததாக தகவல் கிடைத்தது.
உடனடியாக காவல்துறையினர் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர். விசாரணையில், விழுந்த நபர் ரித்தேஷ் அகர்வாலின் தந்தை ரமேஷ் அகர்வால் என அடையாளம் காணப்பட்டது. அவரது சடலத்லை மீட்டு பராஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடற்கூராய்வுக்குப் பிறகு அவரது சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதையும் படிக்க- அயோத்தி படத்தில் ஒவ்வொரு காட்சியும் செதுக்கப்பட்டுள்ளது: சீமான்
எனது தந்தை ரமேஷ் அகர்வால் மார்ச் 10 அன்று காலமானார். அவர் ஒரு முழு வாழ்க்கையை வாழ்ந்தார், ஒவ்வொரு நாளும் என்னையும் நம்மில் பலரையும் ஊக்கப்படுத்தினார். அவரது மரணம் எங்கள் குடும்பத்திற்கு மிகப்பெரிய இழப்பு என்று ரித்தேஷ் அகர்வால் தெரிவித்துள்ளார். கடந்த 7ஆம் தேதிதான் ரித்தேஷ் அகர்வாலின் திருமணம் தில்லயில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது.
இதில் ரமேஷ் அகர்வாலும் பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

970 கோல்கள்: கோப்பை இல்லையென கிண்டல் செய்தவர்களுக்கு சைகையில் பதிலளித்த ரொனால்டோ!

தனுஷ் - விக்னேஷ் ராஜா கூட்டணி வெல்லுமா? கர - திரை விமர்சனம்!

புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு!

யுபிஎஸ்சி: இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமைகள்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


