ரயில்வேக்கு சொந்தமில்லாத ஒரே ஒரு வழித்தடம்

வந்தே பாரத் என உலக தரத்துக்கு ரயில் சேவையை வழங்குவதில் உலக அளவில் முன்னணியில் உள்ளது.
ரயில்வேக்கு சொந்தமில்லாத ஒரே ஒரு வழித்தடம்

கடந்த சில ஆண்டுகளாக இந்திய ரயில்வே, மிகப்பெரிய சாதனைகளை படைத்து வருகிறது, மெட்ரோ ரயில், வந்தே பாரத் என உலக தரத்துக்கு ரயில் சேவையை வழங்குவதில் உலக அளவில் முன்னணியில் உள்ளது.

உலகிலேயே மிகப்பெரிய வழித்தடங்களை கொண்டு, எண்ணற்ற ரயில்களை இயக்கும் இந்திய ரயில்வே பல பெருமைகளை தன்னகத்தே கொண்டுள்ளது.

ஆனால், இவ்வளவு இருந்தும் கூட, இந்திய நாட்டில், ரயில்வேக்கு அல்லது நாட்டுக்கு சொந்தமாகாத, இன்னமும் பிரிட்டிஸ் நிறுவனத்துக்கு சொந்தமாக இருக்கும் ஒரு ரயில்வழித்தடம் இருக்கிறது என்று சொன்னால் நம்ப முடிகிறது.

ஆம், மகாராஷ்டிர மாநிலத்தில் யவத்மால் - முர்திஜாபூர் இடையேயான 190 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட வழித்தடம் ஷாகுந்தலா ரயில்வேக்கு சொந்தமானதாக உள்ளது. இது பிரிட்டிஸ் ஆட்சிக் காலத்தில் கட்டமைக்கப்பட்டது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் ஓடிக் கொண்டிருந்த ரயில் போக்குவரத்து, 1952ஆம் ஆண்டு நாட்டுடைமை ஆக்கப்பட்டபோது, இந்த வழித்தடத்தை நாட்டுடைமை ஆக்க அந்த நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துவிட்டிருந்தது.

19ஆம் நூற்றாண்டிலிருந்து இப்பாதையில் ரயில்களை இயக்கி வரும் நிறுவனம், தற்போதும் அதனை சொந்தம் கொண்டாடி வருகிறது. இந்த வழித்தடத்தில் ரயில்களை இயக்க பிரிட்டிஷ் நிறுவனத்துக்கு இந்தியா ஒரு கோடி ரூபாயை இயக்கக் கட்டணமாக செலுத்தி வருகிறதாம். 1910ஆம் ஆண்டில் இந்த ஷாகந்தலா ரயில்வே நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த வழித்தடத்தில் நாள் ஒன்றுக்கு இரு மார்கத்திலும் தலா ஒரு ரயில் மட்டும் இயக்கப்படுகிறது. அம்ராவதி மாவட்டத்தில் உள்ள யவத்மால் மற்றும் அசல்பூர் இடையே இயக்கப்படும் ரயில் பயணமானது 20 மணி நேரம் எடுக்கும். இதற்கான கட்டணம் ரூ.150 வசூலிக்கப்படுகிறது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com