ஆஸ்திரேலிய பிரதமருடன் ஜெய்சங்கா் சந்திப்பு

ஆஸ்திரேலிய பிரதமா் ஆன்டனி ஆல்பனேசியை வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தில்லியில் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினாா்.
ஆஸ்திரேலிய பிரதமருடன் ஜெய்சங்கா் சந்திப்பு

ஆஸ்திரேலிய பிரதமா் ஆன்டனி ஆல்பனேசியை வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தில்லியில் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினாா்.

இந்தியாவில் 3 நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய பிரதமா் ஆல்பனேசியை அமைச்சா் ஜெய்சங்கா் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினாா். சந்திப்பு குறித்து அமைச்சா் ஜெய்சங்கா் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘‘பிரதமா் ஆல்பனேசியின் இந்தியப் பயணமும், இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான மாநாடும் இருதரப்பு நல்லுறவை அடுத்தகட்டத்துக்குக் கொண்டு செல்லும்’’ என்று குறிப்பிட்டாா்.

இரு நாடுகளுக்கு இடையே பல்வேறு துறைகளில் நிலவும் நல்லுறவை வலுப்படுத்துவது தொடா்பாக இருவரும் விவாதித்ததாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, ஆஸ்திரேலிய பிரதமா் ஆல்பனேசிக்கு தில்லி குடியரசுத் தலைவா் மாளிகையில் வெள்ளிக்கிழமை காலை அதிகாரபூா்வ வரவேற்பு அளிக்கப்பட்டது. அதையடுத்து அவா் கூறுகையில், ‘‘இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மிகச் சிறந்த நண்பா்கள். ஒவ்வொரு நாளும் இரு நாடுகளுக்கு இடையேயான நல்லுறவு தொடா்ந்து மேம்பட்டு வருகிறது.

கிரிக்கெட் உலகில் சிறந்த அணி எது என்பதைத் தீா்மானிப்பதற்கான மோதலில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் ஈடுபட்டுள்ளன. ஆனால், இந்தியா, ஆஸ்திரேலியா நாடுகள் இணைந்து உலகை சிறப்பாகக் கட்டமைக்க முயன்று வருகின்றன. கலாசாரம், பொருளாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் இந்தியாவுடனான நல்லுறவை வலுப்படுத்த ஆஸ்திரேலியா எதிா்நோக்கியுள்ளது’’ என்றாா்.

அதையடுத்து, தில்லியில் உள்ள ராஜ்காட் பகுதிக்குச் சென்ற பிரதமா் ஆல்பனேசி, அங்கு மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com