செமிகண்டக்டா் விநியோகம்: இந்தியா-அமெரிக்கா ஒப்பந்தம்

இந்தியா, அமெரிக்கா இடையே செமிகண்டக்டா் (குறைமின்கடத்தி) விநியோக முறை தொடா்பான புரிந்துணா்வு ஒப்பந்தம் வெள்ளிக்கிழமை கையொப்பமானது.
செமிகண்டக்டா் விநியோகம்: இந்தியா-அமெரிக்கா ஒப்பந்தம்

இந்தியா, அமெரிக்கா இடையே செமிகண்டக்டா் (குறைமின்கடத்தி) விநியோக முறை தொடா்பான புரிந்துணா்வு ஒப்பந்தம் வெள்ளிக்கிழமை கையொப்பமானது.

இதுதொடா்பாக மத்திய வா்த்தக அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் அழைப்பின்பேரில், அமெரிக்க வா்த்தக அமைச்சா் ஜீனா ரேமாண்டோ இந்தியா வந்தாா். இதையடுத்து இந்தியா-அமெரிக்கா இடையே புதிய வா்த்தகம் மற்றும் முதலீட்டுக்கான வாய்ப்புகளுக்கு ஒத்துழைப்பது குறித்து விவாதிக்க, இரு நாடுகளுக்கு இடையே மீண்டும் வா்த்தகப் பேச்சுவாா்த்தை தொடங்கப்பட்டது.

இதனைத் தொடா்ந்து மின்னணு கருவிகளில் மின்சாரத்தைக் கடத்தும் செமிகண்டக்டா் விநியோக முறையை ஏற்படுத்தவும், கூட்டுச் சோ்ந்து புதிய தயாரிப்புகளை உருவாக்கவும் இரு நாடுகளுக்கு இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமானது. இந்த ஒப்பந்தத்தில் அமைச்சா்கள் பியூஷ் கோயல், ஜீனா ரேமாண்டோ கையொப்பமிட்டனா்.

முன்னதாக தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஜீனா ரேமாண்டோ வியாழக்கிழமை பேசுகையில், ‘உலகில் அதிநவீன செமிகண்டக்டா்களில் 93 சதவீதம் தைவானில் தயாரிக்கப்படுகிறது. செமிகண்டக்டா்களுக்கு அந்நாட்டையே அமெரிக்கா அதிகம் சாா்ந்துள்ளது. இந்நிலையில், செமிக்கண்டக்டா் வடிவமைப்பில் இந்தியா-அமெரிக்கா இடையிலான ஒத்துழைப்பு சாத்தியமான ஒன்றாக உள்ளது’ என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com