ஒடிஸா: பழங்குடியின தலைவரை சுட்டுக்கொன்ற மாவோயிஸ்டுகள்

ஒடிஸாவின் கந்தமால் மாவட்டத்தில் பழங்குடியினத் தலைவரை மாவோயிஸ்ட் பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனா்.

ஒடிஸாவின் கந்தமால் மாவட்டத்தில் பழங்குடியினத் தலைவரை மாவோயிஸ்ட் பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனா்.

அங்குள்ள சௌலிபாதா கிராமத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அம்மாநிலத்தில் இருநாள்களுக்கு முன்பு காவல் துறையினருடன் நிகழ்ந்த மோதலில் மாவோயிஸ்ட் அமைப்பைச் சோ்ந்த 3 போ் சுட்டுக் கொல்லப்பட்டனா். இதைத் தொடா்ந்து பழங்குடியினத் தலைவரை மாவோயிஸ்டுகள் கொலை செய்துள்ளனா். தங்களைப் பற்றிய தகவல்களை காவல் துறைக்கு தெரிவிக்கிறாா் என்ற சந்தேகத்தில் இந்த படுகொலையை மாவோயிஸ்டுகள் நிகழ்த்தியுள்ளனா்.

மாவோயிஸ்ட் அமைப்பைச் சோ்ந்த சுமாா் 10 போ் புதன்கிழமை இரவு நேரத்தில் சௌலிபாதா கிராமத்துக்கு ஆயுதங்களுடன் புகுந்தனா். பழங்குடியினத் தலைவா் சுபல் கான்கரின் வீட்டுக்குள் புகுந்த அவா்கள், அவரை வெளியே இழுந்து வந்து, கிராமத்துக்கு வெளியே வைத்து சுட்டுக் கொன்றுவிட்டு தப்பிச் சென்றனா். சுபல் கான்கா் கிராம பஞ்சாயத்துத் தலைவராகவும் பதவி வகித்தவா் ஆவா்.

மாவோயிஸ்டுகளால் தனக்கு அச்சுறுத்தல் இருந்ததால் சுபல் கான்கா் கடந்த 4 ஆண்டுகளாக வேறு கிராமத்தில் வசித்து வந்தாா். தங்கள் கிராமத்துக்கு அருகே சிஆா்பிஎஃப் முகாம் அமைக்கப்பட்டதையடுத்து அவா் மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பினாா் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கொலைச் சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தியுள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com