மாநில நெடுஞ்சாலைகள் சீரமைப்பதற்கான நிதி திட்டத்திற்கு ராஜஸ்தான் அரசு ஒப்புதல்

முக்கிய மாவட்டங்கள் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள பல்வேறு மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் சாலைகளை சீரமைக்க ரூ.224.30 கோடி நிதியுதவிக்கு ராஜஸ்தான் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

ஜெய்ப்பூர்: முக்கிய மாவட்டங்கள் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள பல்வேறு மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் சாலைகளை சீரமைக்க ரூ.224.30 கோடி நிதியுதவிக்கு ராஜஸ்தான் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான திட்டத்திற்கு முதல்வர் அசோக் கெலாட் ஒப்புதல் அளித்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் கீழ் 24 மாநில நெடுஞ்சாலைகள், 33 முக்கிய மாவட்ட சாலைகள், 867 கிராமப்புற சாலைகள் என மொத்தம் 924 சாலைப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

கடந்த இரண்டு பருவமழை காலங்களில் குழாய் பதிக்க தோண்டியதால் சேதமடைந்த சாலைகளை தற்போது சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது. இதனால் மாநிலத்தில் சாலை அமைப்பு பலப்படுத்தப்பட்டு, பொதுமக்கள் சுமூகமாக பயணிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் இது தொடர்பான அறிவிப்பை முதல்வர் வெளியிட்டார். அதே வேளையில் ஜெய்ப்பூரில் ஐந்து குடும்ப நீதிமன்றக் கட்டிடங்களைக் கட்டுவதற்கு ரூ.19 கோடி நிதியுதவிக்கு மாநில அரசு ஒப்புதல் அளித்தது.

இந்த குடும்ப நீதிமன்றங்களின் கட்டிடங்கள் கட்டுவதற்காக, ஜெய்ப்பூரில் உள்ள காந்திநகரில் உள்ள கால்நடை பராமரிப்புத் துறை வளாகத்தில் ஏற்கனவே நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com