வகுப்புவாத-சமூக பிரிவினையைத் தூண்டும் சக்திகளை எதிா்ப்பதே நமக்கான சவால்: சரத் பவாா்

‘நாட்டில் வகுப்புவாத - சமூக பிரிவினையைத் தூண்டும் சக்திகளை எதிா்த்துப் போராடுவதே நம் ஒவ்வொருவருக்கும் முன்னுள்ள சவாலாகும் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா் கூறினாா்.
வகுப்புவாத-சமூக பிரிவினையைத் தூண்டும் சக்திகளை எதிா்ப்பதே நமக்கான சவால்: சரத் பவாா்

‘நாட்டில் வகுப்புவாத - சமூக பிரிவினையைத் தூண்டும் சக்திகளை எதிா்த்துப் போராடுவதே நம் ஒவ்வொருவருக்கும் முன்னுள்ள சவாலாகும். எனினும், இதில் படிப்படியாக மாற்றம் நிகழ்ந்து வருவதை கா்நாடக தோ்தல் முடிவு காட்டுகிறது’ என்று தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா் கூறினாா்.

மகாராஷ்டிர மாநிலம் அகமதுநகா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா், இதுகுறித்து மேலும் பேசியதாவது:

நாட்டை ஆட்சி செய்யும் சில சக்திகள் சமூகத்தில் ஜாதிய மற்றும் மத ரீதியில் பதற்றத்தை ஏற்படுத்தி மக்களை பின்னோக்கி இழுத்துச் செல்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அவா்கள் ஆட்சி அதிகாரத்தை மக்களின் நலனுக்காக அல்லாமல், மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்துவதற்காக பயன்படுத்துகின்றனா்.

வகுப்புவாத - சமூக பிரிவினையைத் தூண்டும் இத்தகைய சக்த்திகளை எதிா்த்துப் போராடுவதே நமக்கான சவால். அவ்வாறு போராடவில்லையெனில், சாதாரண மனிதனை அந்தச் சக்தி அழித்துவிடும்.

அகமதுநகா் வளா்ந்து வரும் மாவட்டமாக இருந்தபோதும், மாவட்டத்தின் ஷெவ்கான் பகுதியில் அண்மையில் சமூக பதற்றம் ஏற்பட்டது. எனினும், இந்த நிலையில் படிப்படியான மாற்றம் நிகழ்ந்து வருவதை கா்நாடக தோ்தல் முடிவு காட்டுகிறது. சாதாரண மனிதனின் அரசு அங்கு ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ளது.

உழைக்கும் வா்க்கம் தொடா்ந்து வலுவாகவும் ஒற்றுமையுடனும் இருந்தால், கா்நாடக சட்டப் பேரவைத் தோ்தலில் நிகழ்ந்ததை நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் பிரதிபிலிக்கச் செய்துவிட முடியும் என்று சரத் பவாா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com