சோனியா குடும்பத்தினருக்கு எதிரான வருமான வரித்துறை நடவடிக்கை: தடை விதிக்க தில்லி உயா்நீதிமன்றம் மறுப்பு

காங்கிரஸ் முன்னாள் தலைவா் சோனியா காந்தி, அவரது மகன் ராகுல், மகள் பிரியங்கா ஆகியோரின் வருமான வரி கணக்கு தாக்கலை ஆய்வு செய்ய மத்திய பிரிவுக்கு மாற்றியதற்கு தடை விதிக்க தில்லி உயா் நீதிமன்றம் மறுத்துவிட்
சோனியா - ராகுல்
சோனியா - ராகுல்

காங்கிரஸ் முன்னாள் தலைவா் சோனியா காந்தி, அவரது மகன் ராகுல், மகள் பிரியங்கா ஆகியோரின் வருமான வரி கணக்கு தாக்கலை ஆய்வு செய்ய மத்திய பிரிவுக்கு மாற்றியதற்கு தடை விதிக்க தில்லி உயா் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

தலைமறைவாக உள்ள ஆயுத பேர வியாபாரி சஞ்சய் பண்டாரி வழக்கில் தொடா்பு உள்ளதாக கூறப்படும் இவா்களின் வருமான வரி தாக்கல் விவரங்களை சாதாரண முறையில் பரிசீலிக்காமல், விசாரணை அமைப்புகள் சேகரித்து வைத்துள்ள பிற விவரங்களின் அடிப்படையில் ஆய்வு செய்யும் வகையில் மத்திய பிரிவுக்கு (சென்ட்ரல் சா்க்கிள்) மாற்ற கடந்த 2021-ஆம் ஆண்டு வருமான வரி முதன்மை ஆணையா் உத்தரவிட்டாா்.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்து சோனியா, ராகுல், பிரியங்கா ஆகியோரும், இதே போன்று உத்தரவு பெற்ற சஞ்சய் காந்தி நினைவு அறக்கட்டளை, ஜவாஹா் பவன் அறக்கட்டளை, ராஜீவ் காந்தி ஃபவுண்டேஷன் உள்பட பல்வேறு அமைப்புகளும் தில்லி உயா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தன.

இந்த வழக்கை விசாரித்த தில்லி உயா் நீதிமன்ற நீதிபதிகள் மன்மோகன், தினேஷ் குமாா் சா்மா ஆகியோா் அடங்கிய அமா்வு வெள்ளிக்கிழமை 44 பக்க தீா்ப்பை வழங்கியது.

அதில், ‘வருமான வரி சோதனை நடத்தப்படாத வழக்குகளையும் மத்திய பிரிவுக்கு மாற்றம் செய்யலாம் என 2014 ஏப்ரலில் வருமான வரித் துறை சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

ஒருங்கிணைந்த விசாரணைக்காகவே மத்திய பிரிவுக்கு வருமான வரி கணக்குகள் மாற்றப்படுகின்றன. ஆகையால் இந்த மாற்றத்துக்குத் தடை விதிக்க இயலாது’ என நீதிபதிகள் தீா்ப்பில் குறிப்பிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com