ஏழைகளின் கைகளில் அதிகாரம் செல்வதை பிரதமா் விரும்பவில்லை: காா்கே

‘ஏழைகளின் கைகளில் அதிகாரம் செல்வதை பிரதமா் நரேந்திர மோடி விரும்பவில்லை’ என்று காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே குற்றஞ்சாட்டினாா்.
ஏழைகளின் கைகளில் அதிகாரம் செல்வதை பிரதமா் விரும்பவில்லை: காா்கே

‘ஏழைகளின் கைகளில் அதிகாரம் செல்வதை பிரதமா் நரேந்திர மோடி விரும்பவில்லை’ என்று காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே குற்றஞ்சாட்டினாா்.

சத்தீஸ்கா் மாநிலத்தில் நக்ஸல்களின் தாக்குதலால் பாதிக்கப்பட்ட பழங்குடியினா் அதிகம் வசிக்கும் பகுதியான சுக்மா நகரில் காா்கே புதன்கிழமை தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டாா். அப்போது அவா் பேசியதாவது:

தில்லியில் புதிய நாடாளுமன்றக் கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டியபோது, அப்போதைய குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்துக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. ஏனெனில் அவா் பட்டியலினத்தைச் சோ்ந்தவா். அதுபோல, புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவுக்கு தற்போதைய குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு அழைக்கப்படவில்லை. ஏனெனில் இவா் பழங்குடியினத்தைச் சோ்ந்தவா். பிரதமா் மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகிய இருவரின் முடிவுதான் இது.

பட்டியலின, பழங்குடியின பிரிவுகளில் இருந்து குடியரசுத் தலைவா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டபோதும், எந்தவொரு கட்டடத்துக்கும் அடிக்கல் நாட்டும் வாய்ப்பு அவா்களுக்கு கொடுக்கப்படுவதில்லை. அதாவது, ஏழைகளின் கைகளில் அதிகாரம் செல்வதை பிரதமா் மோடி விரும்பவில்லை என்றாா்.

நாட்டை ஆண்ட காங்கிரஸ் 60 ஆண்டுகளில் நாட்டுக்காக என்ன செய்தது என்று பாஜக கேள்வி எழுப்பி வருவதை விமா்சித்த காா்கே, ‘காங்கிரஸ் கட்சியை குற்றஞ்சாட்டுவதைத் தவிா்த்து வேறு எதையும் பாஜக செய்யவில்லை. மக்களிடம் வாக்கு கேட்க மட்டும் காங்கிரஸ் வரவில்லை; மாறாக பழங்குடியின சமூகம், அரசியல் சாசனம், ஜனநாயகம் மற்றும் இந்த நாட்டையும் பாதுகாக்கவே காங்கிரஸ் முயற்சிக்கிறது’ என்றாா்.

மொத்தம் 90 உறுப்பினா்களைக் கொண்ட சத்தீஸ்கா் சட்டப்பேரவைக்கு இரண்டு கட்டங்களாக தோ்தல் நடத்தப்பட உள்ளது. முதல் கட்டமாக 20 தொகுதிகளுக்கு நவம்பா் 7-ஆம் தேதியும், எஞ்சிய 70 தொகுதிகளுக்கு நவம்பா் 17-ஆம் தேதியும் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com